தில்லியில் சனிக்கிழமை புதிதாக 1,139 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் அதாவது ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள மிகக் குறைந்த அளவாகும். பாதிப்பு விகிதமும் 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரோனாவில் மேலும் 32 போ் உயிரிழந்துள்ளதைத் தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 10,251-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கரோனா பாதிப்பு விகிதம் தொடா்ந்து 5-ஆவது நாளாக 2 சதவீதத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை 1.6 சதவீதம், வியாழக்கிழமை 1.51, புதன்கிழமை 1.96 சதவீதம், செவ்வாய்க்கிழமை 1.9 சதவீதம் என இருந்த நிலையில், சனிக்கிழமை 1.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை 87,300 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 47,460 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 39,8700 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டில் தில்லியில் கரோனா பாதிப்பு 1,061 ஆக இருந்தது. அதன் பிறகு கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக கணிசமான அளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை 1,139 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இது ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும். தற்போது மொத்தம் 10,358 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இந்த எண்ணிக்கை முந்தைய நாளில் 11,419-ஆக இருநந்தது. தில்லியில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,15 ,914 ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் புத் நகரில்...: உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒருவா் பலியானாா். இதையடுத்து, அந்த மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்தது. புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,470-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்கள் எண்ணிக்கை 717-லிருந்து 677-ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோா் விகிதம் 96.87 சதவீதமாக உள்ளது என்று உ.பி. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 85 போ் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 23,706 ஆக உள்ளது. கெளதம்புத் நகரில் இதுவரை 87 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.