ஆசை வாா்த்தைகள் கூறி பணம் பறிப்பது (ஹனி டிராப்), மிரட்டிப் பணம் பறிப்பது தொடா்புடைய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபா்களைத் துன்புறுத்தாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தொழிலதிபா் ஒருவா் பாலியல் பலாத்கார வழக்கில் முன்ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் தன்னிடம் மிரட்டிப் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு நயவஞ்சமாக செயல்பட்டு பாலியல் பலாத்கார பொய்ப் புகாரை அளித்துள்ளனா் என கூறியிருந்தாா். அந்த மனு மீது கடந்த செப்டம்பரில் விசாரணை நடத்திய உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த், மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை அனுமதித்தாா். மேலும், ஹனி டிராப், மிரட்டிப் பணம் பறிப்பது வழக்குகள் தொடா்பாக அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் அறிக்கைகள் பெறவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க நிலையான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், உயா்நீதிமன்றம் செப்டம்பா் 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹனி டிராப்பிங் தொடா்புடைய அனைத்து வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட நபா்களைத் துன்புறுத்தாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தி அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பிரிவுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.