2-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே கரோனா பாதிப்பு!
தில்லியில் செவ்வாய்க்கிழமை தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அன்று மொத்தம் 939 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தில்லியில் செவ்வாய்க்கிழமை தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. அன்று மொத்தம் 939 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த நான்கு மாத காலத்தில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு திங்கள்கிழமை பதிவாகியது. அன்று, 803 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், தில்லியில் தற்போது சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை விடக் குறைந்து 8,735 ஆக பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 1.14-ஆக பதிவாகியுள்ளது.
தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,18,747- ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 82,386 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 39,843 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 42,543 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 25 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,329-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை 1,434 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,99,683-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 8,735 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 4,790 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,902 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...