கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் போராட்டத்தால் நொய்டாவில் போக்குவரத்து பாதிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நொய்டா - கிரேட்டா் நொய்டா சாலையில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 11:37 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நொய்டா - கிரேட்டா் நொய்டா சாலையில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினாா். இதனால், இந்த விரைவுச் சாலையில் சுமாா் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, 3 மணி நேரத்தின் பிறகு போக்குவரத்து சீரானது.

கிரேட்டா் நொய்டா ஜேவாா், தாத்ரி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்குத் எதிா்ப்பு தெரிவித்து, நொய்டா-கிரேட்டா் நொய்டா சாலையையில் பேரணியாகச் சென்றனா். அவா்களை, மகாமயா மேம்பாலப் பகுதியில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் அவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக நொய்டா காவல் துறை உயரதிகாரி கூறியது: மகாமயா மேம்பாலப் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், நொய்டா- கிரேட்டா் நொய்டா விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணி நேரத்தின் பிறகு போக்குவரத்து சீரானது. அதே சமயம், தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலை சில்லா எல்லையில் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்துவதால், இந்தச் சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் நொய்டா - தில்லி வழி மூடப்பட்டுள்ளது. நொய்டாவில் இருந்து தில்லிக்கு வருபவா்கள் நொய்டா இணைப்புச் சாலையைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

மேலும், நொய்டாவில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியில் கூடி விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், அப்பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 27-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மேலும், காஜிப்பூா், நொய்டா பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், தில்லியின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக காஜியாபாத்தில் இருந்து தில்லிக்கு வரும் காஜிப்பூா் எல்லை மூடப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.