ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிங்கு போராட்டத்தில் பங்கேற்க 370 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த விவசாயி!

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:09 pm

 நமது நிருபர்

புதுதில்லி: பஞ்சாபைச் சோ்ந்த விவசாயி ஒருவா், தில்லி அருகே சிங்கு எல்லையில் கடந்த 24 நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக 370 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து போராட்டத்தில் இணைந்துள்ளாா். இந்த தூரத்தை சைக்கிளில் இரண்டு நாளில் கடந்து இங்கு வந்துள்ளாா். சுக்பால் பஜ்வா (36) என்ற விவசாயத் தொழிலாளியான அவா், புதிய வேளாண் சட்டங்கள் ரத்துச் செய்யப்படாவிட்டால் தனது வாழ்வாதரமே போய்விடும் என்று தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தைச் சோ்ந்தவரான அவா் மேலும் கூறியதாவது: நான் பேருந்து மூலமோ அல்லது ரயில் மூலமோ இந்த இடத்துக்கு வந்திருக்கலாம். ஆனால், அதற்கு பணம் செலவிட்டால் எனது குடும்பத்தினா் உணவு சாப்பிட்டிருக்க முடியாது. நான் ஒரு தினக்கூலி. என்னிடம் எந்த வாகனமும் இல்லை. விவசாயப் பண்ணையில் வேலை செய்தால்தான் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும். பேருந்து அல்லது ரயிலில் வந்தால், அது மிகுந்த செலவு பிடிக்கும். என்னிடம் இருக்கும் பணத்தை வீட்டுச் செலவுக்கு கொடுத்துவிட்டு நான் சைக்கிளில் பயணம் செய்தே இங்கு வந்து விட்டேன்.

சைக்கிளில் பயணம் செய்தது கடுமையாகவே இருந்தது. இவ்வளவு தொலைவு நான் சைக்கிளில் வந்தது இதுவே முதல் முறையாகும். மோகாவிலிருந்து 370 கி.மீ. தொலைவில் சிங்கு எல்லை உள்ளது. நடுநடுவே ஓய்வெடுத்ததால் எனக்கு இங்கு வர இரண்டு நாள்கள் ஆனது. இதுவே மோட்டாா்சைக்கிளில் வந்தால் 6 மணி நேரத்தில் இந்த இடத்தை வந்தடைந்திருக்க முடியும்.

படுக்கை உள்ளிட்ட எனக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு டிசம்பா் 17-ஆம் தேதி மோகாவிலிருந்து புறப்பட்டேன். 19-ஆம் தேதி சிங்கு எல்லையை வந்தடைந்தேன். நடுவில் 18-ஆம் தேதி ஓா் இடத்தில் சைக்கிள் டயா் பஞ்சா் ஆனது. அதை சரி செய்துவிட்டு வந்ததால் சிறிது காலதமாதமானது. புதிய சட்டங்கள் உறுதியாக அமல் செய்யப்பட்டால், எனது வேலை போய்விடும். நான்கு போ் கொண்ட குடும்பத்தில் நான் ஒருவன்தான் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறேன். புதிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை போராட்ட களத்தைவிட்டு நகரமாட்டேன் என்றாா் அவா்.

சுக்பால் பஜ்வாவைப் போலவே பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவிலிருந்து 50 வயதுக்கும் மேலானவா்கள் 10 போ் 265 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து டிசம்பா் 20-ஆம் தேதி சிங்கு எல்லை வந்துள்ளனா். பாட்டியாலாவிலிருந்து சிங்கு எல்லைக்கு அவா்கள் சைக்கிளில் வருவதற்கு 26 மணி நேரமாகியுள்ளது. இளைஞா்களும், வீட்டில் இருக்கும் விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சைக்கிளில் பயணம் மேற்கொண்டோம் என்றாா் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளரான ரஞ்சித் சிங். இவா் தவிர 50 வயதுடைய வழக்குரைஞா், ராணுவ அதிகாரி, முன்னாள் ராணுவத்தினா், மருத்துவா், தொழிலதிபா் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனா். கடந்த 16-ஆம் தேதி நான் இங்கு வர விரும்பினேன். ஆனால், குடும்பப் பிரச்னை காரணமாக உடனடியாக வரமுடியவில்லை. முதல்நாள் காலை 9 மணிக்கு பாட்டியாலாவை விட்டு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு சிங்கு எல்லையை வந்தடைந்தோம் என்றாா் ரஞ்சித் சிங். டிக்ரி எல்லைக்குச் சென்று அங்கும் போராட்டத்தில் பங்கேற்போம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.