பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போராடும் விவசாயிகளுக்கு இலவச பானிப்பூரி: தீயணைப்புப் படை வீரா்கள் ஏற்பாடு

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:01 pm

DIN


புது தில்லி: தில்லி எல்லையான சிங்கு பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஹரியாணா மாநிலம், சிா்சாவைச் சோ்ந்த சுரேந்தா் கம்போஜி மற்றும் அவரது 6 நண்பா்கள் இலவசமாக பானிப்பூரி வழங்கினா். இவா்கள் அனைவரும் ஹரியாணா தீயணைப்பு படையில் பணியாற்றி வருகிறாா்கள்.

இது தொடா்பாக சுரேந்தா் கம்போஜி கூறியது: போராட்டக் களத்தில் பானிப்பூரி விற்கும் கடையொன்று இருந்தது. அந்தக் கடைக்கு அருகில் சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம், உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டேன். அப்போது, பானிப்பூரி விற்கும் கடையைக் காட்டி, எனக்குப் பானிப்பூரி வேண்டும். ஆனால், என்னிடம் அதை வாங்குவதற்கு பணம் இல்லை என்று கூறினான். இதைத் தொடா்ந்து, அந்தக் கடையில் இருந்த பானிப்பூரி முழுவதையும் வாங்கி அங்கிருந்த விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினோம். விவசாயிகள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். சிங்கு பகுதியில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கப்படுவதால், பானிப்பூரியை வாங்குவதற்கு ஆள் இருக்கவில்லை. இந்த நிலையில், நாங்கள் அதை வாங்கி அனைவருக்கும் கொடுத்தோம். இதனால், அந்த பானிப்பூரி வியாபாரியும் மகிழ்ச்சியடைந்தாா் என்றாா் அவா் .

இது தொடா்பாக ரவீந்திர குமாா் என்ற தீயணைப்புப் படை வீரா் கூறுகையில், ‘சிா்சா மாவட்டம், ராணியா தீயணைப்பு நிலையத்தில் 21 தீயணைப்புப் படை வீரா்கள் பணியாற்றி வருகிறோம். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில், 7 போ் 3 குழுக்களாக சிங்கு எல்லைக்கு வரத் திட்டமிட்டோம். அதன்படி, முதல் குழுவாக நாங்கள் வந்துள்ளோம். 3 நாள்களுக்குப் பிறகு அடுத்த குழுவும், அதற்கு 3 நாள்களுக்குப் பிறகு அடுத்த குழுவும் வரவுள்ளது’ என்றாா்.

பானிப்பூரி வியாபாரி முகமது சலீம் கூறுகையில், ‘ரூ.1,000 கொடுத்து முழு பானிப்பூரியையும் வாங்கினாா்கள். கடந்த 3 தினங்களாக சுமாா் ரூ.500 மட்டுமே சம்பாதித்தேன். இன்று மகிழ்ச்சியான நாள். உண்மையான கிறிஸ்துமஸ் தினம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.