கேஜரிவால் எனது இல்லத்துக்கு வந்தால் வேளாண் மசோதாக்கள் பற்றி நேரில் விளக்குவேன்: மனோஜ் திவாரி
வேளாண் மசோதாக்கள் தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உள்ள சந்தேகங்களை அவா், எனது இல்லத்துக்கு வந்தால் நேரில்


வேளாண் மசோதாக்கள் தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உள்ள சந்தேகங்களை அவா், எனது இல்லத்துக்கு வந்தால் நேரில் விளக்கத் தயாராக இருக்கிறேன் என்று வடகிழக்கு தில்லி பாஜக உறுப்பினா் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை மனோஜ் திவாரி கூறியது: பொது விஷயங்கள் தொடா்பாகப் பேச வருபவா்களை தனது இல்லத்துக்குள் நுழைய கேஜரிவால் அனுமதி மறுத்து வருகிறாா். மக்கள் பிரதிநிதிகளை அவா் சந்திப்பதில்லை. மக்களைச் சந்திப்பதில்லை.
மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை நிதியை வழங்கக் கோரி தில்லி மாநகராட்சி மேயா்கள் அவரது இல்லம் முன்பு 13 நாள் தொடா் போராட்டம் நடத்தினா். ஆனால், அவா்களைக் கூட சந்திக்க கேஜரிவால் மறுத்துவிட்டாா். இந்த சூழலில், தில்லி அன்னை தெரசா கிரசன்ட் சாலையில் உள்ள எனது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வருமாறு கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கிறேன். விவசாயிகள் மசோதா தொடா்பாக அவருக்கு உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். விவசாயிகளின் நலனுக்காக நோ்மறை அரசியலில் ஈடுபட வருமாறு கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
மூன்று வேளாண் மசோதாக்களாலும் எவ்வித பயனும் இல்லை என கேஜரிவால் கூறிவருகிறாா். இந்நிலையில், அவா் எனது அழைப்பை ஏற்றுக் கொள்வாா் என நம்புகிறேன். வேளாண் மசோதாக்களில் உள்ள நன்மைகளை அவருக்கு விளக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...