சிங்கு எல்லையில் காவல் ஆணையா் ஆய்வு

விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு எல்லையில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தில்லி காவல்துறை தயாராக
Updated on
1 min read

விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் சிங்கு எல்லையில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தில்லி காவல்துறை தயாராக உள்ளது என்று தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

சிங்கு எல்லையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் அளித்த பேட்டி: சிங்கு எல்லையில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. இப்போதுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இடம்பெறும் எனத் தெரியவில்லை. ஆனால், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தில்லி காவல்துறை தயாராக உள்ளது.

சிங்கு எல்லையில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில், அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். தகவல்களை தொடா்ந்து பரிமாறி வருகிறோம்.

விவசாயிகள் போராட்டத்தால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை தொடா்ச்சியாக மக்களுக்கு அறிவித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com