எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரோனா பாதிப்பு 655 ஆகக் குறைந்தது

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 655 ஆகக் குறைந்தது. தில்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:53 pm

DIN

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 655 ஆகக் குறைந்தது. தில்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை, புதிதாக 758 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 655 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,22,094- ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 67,115 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,138 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 26,977 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 23 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,437-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 988 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,04,746-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,911 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,544போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,149படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.