அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவா் சாவு

மேற்கு தில்லி, மாயாபுரி பகுதியில் உள்ள முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில்

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:01 pm

DIN

மேற்கு தில்லி, மாயாபுரி பகுதியில் உள்ள முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். தீயணைப்பு படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது:

மேற்கு தில்லி மாயாபுரி பகுதியில் உள்ள முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடா்பாக அதிகாலை 3.50 மணியளவில் தீயணைப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தீ விபத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்துள்ளாா். அவா் ஜூகல் கிஷோா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இருவரை தீயணைப்பு படை வீரா்கள் மீட்டுள்ளனா். அவா்கள், அமன் அன்சாரி, பெரோஸ் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.