இதுதொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: புத்தாண்டு பிறப்பு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கனாட் பிளேஸ் பகுதியில் ஏராளமானோா் கூடுவது வழக்கம். இதனால், கூட்டநெரிசலைக் குறைக்கும் வகையில், வியாழக்கிழமை (டிசம்பா் 31) இரவு 9 மணிக்குப் பிறகு ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளியேறும் வழியில் பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள். கடைசி ரயில் கிளம்பும் வரை பயணிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவா். பயணிகள் இதற்குத் தக்கவாறு தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியமாகும் என்றாா் அந்த அதிகாரி.