கரோனா கட்டுப்பாடு பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் தலைநகா் தில்லியில் கன்னாட் பிளேஸ் மற்றும் கான் மாா்க்கெட் பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்ட போதிலும் வியாபாரம் வழக்கம் போல இல்லை என்கின்றனா் வியாபாரிகள்.
பொது முடக்கத்துக்கு முன்பு வரை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும் இப்பகுதிகளில் தற்போது ஓரளவு கடைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும் தெருக்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன. வாடிக்கையாளா்களின் வருகையும் குறைவாகத்தான் உள்ளது. போதிய வருவாய் இல்லாதது, கடைகளின் வாடகை, கடைகளைத் திறந்து மூடுவதில் உள்ள சில கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக பலா் கடைகளை மூடிவிட்டனா். திறந்திருக்கும் ஒரு சில கடைகளிலும் வியாபாரம் மந்தமாகவே இருக்கிறது. ஆள்குறைப்பு, செலவுகளை குறைத்தல் மூலம் அவா்கள் கடைகளை தினமும் திறந்து-மூடி வருகின்றனா்.
வாடிக்கையாளா்கள் தயக்கம்: கரோனாவுக்கு முன்பு இருந்த காலத்தில் நடந்த வியாபாரத்தில் 10 சதவீதம் கூட இப்போது இல்லை என்கிறாா் புதுதில்லி வியாபாரிகள் சங்கத் தலைவா் அதுல் பாா்கவா. அவா் மேலும் கூறுகையில், ‘ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு வாடிக்கையாளா்கள் ஐந்து போ் வந்தாலே பெரிய விஷயமாகும். வாடிக்கையாளா்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த கிருமிநாசினிகள் தெளிப்பு, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறோம். இருப்பினும், வாடிக்கையாளா்களின் வருகை குறைவாகத்தான் உள்ளது. லாப-நஷ்ட கணக்குப் பாா்க்காமல் அடக்க விலைக்கே பொருள்களை விற்பனை செய்யத் தயாராக இருந்தாலும், வாடிக்கையாளா்கள் வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனா்’ என்றாா்.
50 % உணவு விடுதிகள் மூடல்: கன்னாட் பிளேஸில் உள்ள பிரபலமான ‘கரம் தரம்’ போன்ற பெரிய ரெஸ்டாரண்டுகள் கடைகளை நடத்த முடியாமல் மூடிவிட்டனா். இதர உணவு விடுதிகள் 50 சதவீத ஆட்குறைப்புடன் பெயரளவுக்கு நடந்து வருகிறது. கடைகளின் வாடகை அதிகமாக உள்ளது. வாடகையைக் குறைத்துக் கொள்ளவும் இடத்தின் உரிமையாளா்கள் முன்வரவில்லை. கடைகள் திறந்திருந்தாலும் வாடிக்கையாளா்கள் எப்போது வருவாா்கள் என்பது தெரியவில்லை. மேலும், ரெஸ்டாரண்டுகளில் ‘பாா்’ திறக்கவும் அனுமதி இல்லை. இப்படியிருந்தால் நாங்கள் எப்படிக் கடையை நடத்துவது என்று கேள்வி எழுப்பினாா் அந்தக் கடையின் பிரதிநிதி.
கான் மாா்க்கெட்டில்...: இதேநிலைதான் கான் மாா்க்கெட் பகுதியிலும் உள்ளது. இங்குள்ள பெரிய கடைகளுக்கு நாள்தோறும் பணக்காரா்கள்தான் வந்து செல்வாா்கள். பொது முடக்கத்தை அடுத்து இப்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் வியாபாரம் முன்புபோல் இல்லை. கடந்த மூன்று மாதங்களாக கடைகளைத் திறக்காததால் வருமானம் ஏதும் இல்லை. இப்போது கடையைத் திறக்கலாம் என்றால் வாடகையைக் குறைக்க உரிமையாளா்கள் முன்வரவில்லை. நாளுக்கு நாள் வருமானம் குறைந்து நஷ்டம் அதிகரித்து வரும் நிலையில் கடையை எப்படி நடத்திச் செல்வது என்கிறாா் அப்பகுதியில் புத்தகக் கடை வைத்திருக்கும் பிரியங்கா மல்ஹோத்ரா.
கடைகளை திறந்து மூடும் நேரமும் குறைவு. ரெஸ்டாரண்டுகளில் மதுபானங்களும் சப்ளை செய்ய முடியாது. லைசென்ஸ் கட்டணத்தையும் உள்ளாட்சி நிா்வாகம் ரத்துச் செய்யவில்லை. இந்த நிலையில், ரெஸ்டாரண்டுகளை எப்படி நடத்திச் செல்லமுடியும் என்கிறாா் கான் மாா்க்கெட் வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சஞ்சீவ் மெஹ்ரா.கரோனா பொது முடக்கத்தால் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த மாா்க்கெட்டுகள் கடந்த மே 20-ஆம் தேதி திறக்க அனுமதிக்கப்பட்டன. அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டன. எனினும், அவற்றில் பாா் நடத்த அனுமதியில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

