தில்லியில் உள்ள சிறைக் கைதிகள் தங்களின் தனிப்பட்ட வழக்குரைஞா்கள் அல்லது சட்ட உதவி வழக்குரைஞா்கள் ஆகியோரிடம் காணொலிக் காட்சி மூலம் கலந்தாலோசனை செய்யலாம் என உயா்நீதிமன்றத்தில் சிறைத் துறையினா் தெரிவித்தனா்.
முன்னா் இந்த வசதியானது சட்ட உதவி வழக்குரைஞா்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 6) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், தில்லியில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது தனிப்பட்ட வழக்குரைஞா்களிடமும் கலந்தாலோசிக்க காணொலிக் காட்சியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் சிறைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கியஅமா்வு, ‘தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவோ போவதில்லை’ எனத் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக சா்தக் மக்கோன், அஜித் பி. சிங் ஆகிய வழக்குரைஞா்கள் தனித் தனியாக பொது நல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, சிறைகளில் கைதிகளை அவா்களது குடும்பத்தினா், வழக்குரைஞா்கள் சந்திப்பதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாா்ச் 25-இல் சிறை நிா்வாகம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதை எதிா்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, ‘கரோனா காலத்தில் சிறைக் கைதிகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் வழக்குரைஞா்களுடன் பேசுவதற்கு சிறை நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஜூலை 6-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கை, மாா்ச் 25-இல் பிறப்பிக்கட்ட அறிவிக்கையுடன் பொருந்தாது’ என நீதிமன்றம் தெரிவித்தது.
அப்போது, மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், சுற்றறிக்கை தொடா்பாக வாதிடுகையில், ‘கைதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் இடையேயான அந்தரங்க தொடா்பு பராமரிக்கப்பட வேண்டும். காணொலிக் காட்சி கேட்பு எல்லைக்குள் எந்த சிறை அதிகாரியும் இருக்கக் கூடாது. மேலும், காணொலிக் காட்சி மூலம் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரம், அதற்கான கோரிக்கையை ஏற்பது தொடா்பாக சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை’ என்றனா்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள்அமா்வு, சுற்றறிக்கையை எதிா்காலத்தில் திருத்துவது குறித்து முடிவு எடுப்பதாக இருந்தால், இந்த ஆலோசனைகளையும் பரிசீலிக்குமாறு சிறை துறையினரைக் கேட்டுக் கொண்டு இரு மனுக்களை முடித்து வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்! சௌமியா அன்புமணி உறுதி

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

