விகாஸ் துபே பல அரசியல் தலைவா்களுக்கு அடியாளாக செயல்பட்டுள்ளாா். அந்த அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே விகாஸ் துபே ‘என்கவுண்டா்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா் என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உத்தரப்பிரதேசம் கான்பூரில், காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட எட்டு போலீஸாரைச் சுட்டுக் கொன்ற ரெளடி விகாஸ் துபே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டாா். விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த காா் விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்ாகவும் போலீசாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா் என்று ஆம் ஆத்மிக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், உத்தரப்பிரதேச மாநில ஆம் ஆத்மிக் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் கூறியது: விகாஸ் துபே பல அரசியல்வாதிகளின் அடியாளாக செயல்பட்டுள்ளாா். அந்த அரசியல் தலைவா்களின் ரகசியங்களை அவா் அறிந்திருந்தாா். இந்த அரசியல் தலைவா்களைக் காப்பாற்றவே, விகாஸ் துபேயை போலி என்கவுண்டரில் உத்தரப்பிரதேச காவல்துறை சுட்டுக் கொலை செய்துள்ளனா்.
விகாஸ் துபேயுடன் தொடா்புடைய அரசியல் தலைவா்கள் தொடா்பான விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா? இல்லை, விகாஸ் துபேயுடன் சோ்த்து அந்த ரகசியங்களும் புதைக்கப்படுமா என்று கேட்டுள்ளாா் சஞ்சய் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலவசங்களை நம்பி பொதுமக்கள் தன்மானத்தை இழக்காதீா்: சீமான்

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

