தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,089 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 42 போ் கரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2468 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா். இதனால், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 84,694-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 21,146 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,961 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆா்டி-பிசிஆா் முறையில் 10,129 சோதனைகளும், ரேபிட் ஆன்டிஜென் முறையில் 12,832 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் இதுவரை மொத்தம் 7,47,109 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 633-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

