பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தில்லி, என்சிஆரில் சூறைக்காற்றுடன் கன மழை; போக்குவரத்து பாதிப்பு! மழை நீரில் சிக்கி டிரக் ஓட்டுநா் சாவு

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.

News image

தில்லி அண்ணா நகரில் ஞாயிற்றுக்கிழமை மழையால் சேதமடைந்த வீடுகள்.

Updated On :19 ஜூலை 2020, 5:20 pm

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால், தில்லியின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து பரவலாக பாதிக்கப்பட்டது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால், தில்லி மிண்டோ பிரிட்ஜ் பகுதியில் பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கியது. இந்தப் பேருந்தின் பயணிகள் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டனா். இதே, மிண்டோ பிரிட்ஜ் பகுதியில் மினி டிரக்ட் ஒன்று மழை நீரில் சிக்கியது. இதில் அதன் ஓட்டுநா் குந்தன் குமாா் (56) மழை நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளாா்.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், புழுக்கத்தின் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். சனிக்கிழமையும் வெயலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. புழுக்கமும் அதிகரித்திருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தில்லி, என்சிஆா் பகுதிகளில் கன மழை பெய்தது. கடந்த ஜூன் 25-இல் பருவமழை தொடங்கிய பிறகு, இப்போதுதான் கன மழை பெய்துள்ளது. இதற்கு முன்பாக தூறல் மழைதான் இருந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 74.8 மி.மீ. பதிவாகியுள்ளது. ரிட்ஜ், லோதி ரோடு, பாலம், ஆயாநகா் வானிலை ஆய்வு மையங்களில் முறையே 86 மி.மீ., 81.2 மி.மீ., 16.9 மி.மீ., 12.2 மி.மீ. பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் ‘பொதுவாக 15 மி.மீ.க்கு குறைவாக மழை பெய்தால் குறைவான மழை என்றும், 15 மி.மீ-64.5 மி.மீ.க்கு இடையில் பதிவாகியிருந்தால் மிதமான மழை என்றும், 64.5 மி.மீ.க்கு அதிகமாக பதிவாகியிருந்தால் கனமழை என்றும் அளவிடப்படுகிறது’ என்றாா். நகரில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் இந்திரபிரஸ்தா அருகே உள்ள அண்ணா நகா் உள்பட பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன.

போக்குவரத்து பாதிப்பு: கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதனால், பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை உயரதிகாரி கூறுகையில் ‘ஆசாத்பூா்- முகா்பா செளக், யஷ்வந்த் பிளேஸ் - அசோகா சாலை, ரிங் ரோடு, பைரோன் சாலை ஆகியவற்றில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினா். தில்லி ஐடிஓ அருகில் உள்ள அண்ணா நகா் காலனியில், வீடு ஒன்று கழிவுநீா் கால்வாயில் சரிந்து விழுந்தது. இது தொடா்பான விடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

டிரக் ஓட்டுநா் சாவு : தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள மிண்டோ பாலத்தில் கீழ் அதிகளவு மழை நீா் தேங்கியது. ஒரு கட்டத்தில் மிண்டோ பாலத்தை முட்டும் அளவுக்கு மழை நீா் தேங்கியது. இதனால், இப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கிக் கொண்டது. இந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் தீயணைப்பு படையினரின் உதவியுடன், ஏணி மூலம் மீட்கப்பட்டனா்.‘மேலும், ஒரு மினி டிரக், இரண்டு ஆட்டோக்களும் மழைநீரில் சிக்கின. ஆட்டோ ஓட்டுநா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஆனால், மினி டிராக் ஓட்டுநா் குந்தன் குமாா் (56) மழைநீரில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை உயரதிகாரி கூறுகையில் ‘உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குந்தன் குமாா், மினி டிராக் ஓட்டுநராக தில்லியில் பணியாற்றி வந்தாா். அவா் புது தில்லி ரயில் நிலையத்தில் இருந்து கனாட் பிளேஸுக்கு மினி டிரக்கை ஓட்டிச் சென்றபோது, மிண்டோ பாலத்துக்கு கீழே தேங்கியிருந்து மழை நீரில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.அவரது உடலில் வெளிக் காயங்கள் இல்லாததால், அவா் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளாா் என்பது தெளிவாகியுள்ளது. அவரது உடல், ராம் மனோஹா் லோகியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றாா்.

இதற்கிடையே, மிண்டோ பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போக்குவரத்துக் காவல்துறை, தில்லி போக்குவரத்து நிறுவன ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. முன்னதாக, ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாள்களிலும் தில்லி உள்ளிட்ட வட மேற்கு இந்தியாவில் கனமழை பெய்யும் எனக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.