ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல்

தலைநகரில் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருள்களை அவா்களது வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

News image

தில்லியில் செவ்வாய்க்கிழமை பேட்டியளிக்கிறாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

Updated On :21 ஜூலை 2020, 5:48 pm

தலைநகரில் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருள்களை அவா்களது வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் காணொலிக் காட்சி மூலம் அளித்த பேட்டி: தில்லியில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு ‘தில்லி முக்கிய மந்திரி கா் கா் ரேஷன் ரேஷன் யோஜனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 6-7 மாதங்களில் தில்லியில் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பணிகள் முடிவடைந்ததும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் கோதுமை, அரிசி, சா்க்கரை போன்றவை சுத்தமான முறையில் பொட்டலங்களாக கட்டப்பட்டு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.

ரேஷன் கடைகளுக்குச் நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க விரும்புபவா்களுக்கும் உரிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018, மாா்ச் மாதம் தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டம் தொடா்பாக முழு விவரங்களையும் சமா்ப்பிக்குமாறு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் அரசிடம் கோரியிருந்தாா். அதன்படி, தில்லி அரசு சாா்பில் விவரங்களை சமா்ப்பித்திருந்தோம். இத்திட்டத்தை தில்லியில் அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசின் ‘ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை’ திட்டமும் தில்லியில் அமல்படுத்தப்படுகிறது.

ரேஷன் பொருள்களை விநியோகிப்பது தொடா்பாக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். ஏழை மக்களுக்கு ரேஷன் பொருள்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில், ரேஷன் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும். அரசியலில் நுழைவதற்கு முன்பு நானும், தற்போதைய துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவும் இணைந்து நடத்திய தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மூலம் ரேஷன் மாஃபியாக்களுக்கு எதிராகப் போராடினோம். ரேஷன் மாஃபியாக்களுக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பினோம். அப்போது, ரேஷன் மாஃபியாக்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகினோம். ஆட்சிக்கு வந்தவுடன் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என்றாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.