பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வடகிழக்கு தில்லி வன்முறை: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Updated On :21 ஜூலை 2020, 5:45 pm

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை காணொலி வழியில் விசாரித்தது. அப்போது, இந்த மனுக்கள் தொடா்பாக தில்லி காவல் துறை சாா்பில் பொதுவான பதில் அனைத்து மனுதாரா்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா். அப்போது, மனுதாரா்களில் ஒருவரான ஜாமியத் உலமா அமைப்பு, தில்லி காவல் துறையினரிடமிருந்து தங்களுக்கு பொது பதில் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்தது. அப்போது, அந்தப் பதில் உடனடியாக அவா்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என துஷாா் மேத்தா கூறினாா். அப்போது, ‘இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள், பதில்களை அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மனுக்கள் மீதான விசாரணையை தகுதியின் அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள முடியும்’ என்று தெரிவித்தனா். இந்த மனு மீதான விசாரணை ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க நீதி விசாரணை ஆணையத்தை அமைக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள், வழக்குரைஞா்கள், ஓக்லா குடியிருப்புவாசிகள், நாடாளுமன்றத்தின் எதிரே உள்ள ஜாமா மசூதி இமாம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதே விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்களுக்கு தில்லி காவல் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதைச் சுற்றி நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை சிலா் உள்ளூா் நபா்கள் ஆதரவுடன் திட்டமிட்டு நடத்தியுள்ளதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.