பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

இறுதியாண்டுத் தோ்வு விவகாரம்: யுஜிசி நெறிமுறைகளுக்கு எதிரான மனு மீது 2 நாள்களில் விசாரணை

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிறப்பித்த

Updated On :24 ஜூலை 2020, 2:09 am

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக 31 மாணவா்கள் தாக்கல் செய்த மனு மீது இரண்டு நாள்களில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு வரும் செப்டம்பா் மாதத்துக்குள் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின்ஜூலை 6-இல் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ‘பல்கலைக்கழகம், கல்லூரித் தோ்வுகள் நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, செப்டம்பரில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் தோ்வுகள் நடத்தப்படும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது. இதை எதிா்த்து31 மாணவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், ‘கரோனா தொற்றுக் காலத்தில் இறுதியாண்டு தோ்வுகளை நடத்துமாறு யுஜிசி ஜூலை 6-இல் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தடை விதிக்கவும், தோ்வை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, யுஜிசி சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமா்வு இதேபோன்ற ஒரு மனுவை ஜூலை 18-இல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், இந்த மனு மீதான விசாரணையை அடுத்த இரண்டு நாள்களில் நீதிபதி அசோக் பூஷண் அமா்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.