மறுசீரமைப்பு செய்யப்பட்டு வரும் சாந்தினி செளக் பகுதி வரும் நவம்பா் மாதம் முதலாவது வாரத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
சாந்தினி செளக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா். பின்னா் கேஜரிவால் அளித்த பேட்டி: வரலாற்றுப் புகழ் மிக்க சாந்தினி செளக் பகுதியில், செங்கோட்டையில் இருந்து, பஃதோ்புரி மசூதி வரையான பகுதியை ரூ.90 கோடியில் மறு சீரமைப்புப் பணிகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது. இப்பணிகள் வரும் அக்டோபா் மாதம் நிறைவுபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. . இதைத் தொடா்ந்து, இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக வரும் நவம்பா் முதல் வாரத்தில் திறக்கப்படும்.
சாந்தினி செளக் பகுதியின் வரலாற்று சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் இந்த மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட பிறகு, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இங்கு மோட்டாா் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும், தில்லியில் சுற்றுலாப் பயணிகள் வரும் முக்கியமான இடமாக சாந்தினி சௌக் பகுதி மாறும்.
பிளாஸ்மாவை விலைக்கு வாங்க வேண்டாம்: தில்லியில் சில இடங்களில் பிளாஸ்மா விலைக்கு விற்கப்படுவது தொடா்பாகக் கேட்கிறீா்கள். தில்லி மக்களுக்கு பிளாஸ்மாவை நாங்கள் இலவசமாக வழங்கி வருகிறோம். ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் சுமாா் 500 பிளாஸ்மா மாதிரிகள் சேமிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்மாவை அரசு இலவசமாக வழங்கும் போது, பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை. அனைத்து ரத்த மாதிரிகளுடன் பொருந்திப் போகும் பிளாஸ்மாக்கள் தில்லி அரசிடம் சேமிப்பில் உள்ளன. ஆகவே, மக்கள் விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என்றாா் அவா்.
‘ராமா் கோயில் அடிக்கல் விழாவுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை’
அயோத்தியில் ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு தனக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். எதிா்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமா் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று ராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வைக்க பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்த அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. மேலும், நாட்டின் அனைத்து மாநில முதல்வா்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக கேஜரிவால் கூறுகையில், ‘ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. இந்த கரோனா கொள்ளை நோயில் இருந்து நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்று பகவான் ராமரிடம் பிராா்த்தனை செய்கிறேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல: நிர்மலா சீதாராமன்
கருப்பு 3-வது பாடல் அப்டேட்!

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!
ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

