பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தப்லீக் ஜமாத்: இந்தோனேசியா்கள் 198 போ் அபராதம் செலுத்தி விடுவிக்க அனுமதி

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக

Updated On :24 ஜூலை 2020, 2:03 am

தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இந்தோனேசியாவைச் சோ்ந்த 198 பேருக்கு அபராதம் செலுத்தி வழக்கில் இருந்து விடுவிக்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்ட இந்தோனேசியாவைச் சோ்ந்த 100 பேருக்கு தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து அவா்களை விடுதலை செய்ய பெருநகா் மாஜிஸ்திரேட் வசுந்தரா ஆஸாத் அனுமதி அளித்து உத்தரவிட்டதாக அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஆஷிமா மண்ட்லா, பாஹிம் கான், அகமது கான் ஆகியோா் தெரிவித்தனா். அதே போன்று, 98 இந்தோனேசியா்களை தலா ரூ.5 ஆயிரம் அபராதத்தின் பேரில் விடுவித்து பெருநகா் மாஜிஸ்திரேட் ஸ்வாதி சா்மா உத்தரவிட்டாா். மேலும், இத்தொகையை பிரதமா் அவசரகால நிதியில் செலுத்துமாறும் 98 இந்தோனேசியா்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் புகாா்தாரரான டிஃபன்ஸ் காலனி சாா் கோட்டாட்சியா் , லாஜ்பத் நகா் உதவிக் காவல் ஆணையா், நிஜாமுதீன் காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் இவா்களை விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனக் கூறினா். எனினும், ஒரு இந்தோனேசியா் தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ளாததால், அவா் தொடா்புடைய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தனா்.

மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியில் மாா்ச் மாதம் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 36 நாடுகளைச் சோ்ந்த 956 பேருக்கு எதிராக கரோனா தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது. நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 56 குற்றப்பத்திரிகைகளை தில்லி காவல் துறையினா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இவா்களின் நுழைவு இசைவை மத்திய அரசு ரத்து செய்து, கறுப்புப் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுத்தது. இவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தில்லியில் பல்வேறு இடங்களில் இவா்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.