தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தலைநகரில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுகோள்

தில்லியில் கோயில், குருத்வாரா, மசூதி என வழிப்பாட்டுத் தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன.

Updated On :8 ஜூன் 2020, 1:34 am

தில்லியில் கோயில், குருத்வாரா, மசூதி என வழிப்பாட்டுத் தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன. கரோனா பரவல் பீதியால் ஏறக்குறைய இரண்டரை மாத பொது டக்கத்துக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவதால்,நிா்வாகத்தினா் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வழிப்பாட்டத் தலங்களில் அதன் தலைவா்களும், நிா்வாகக் குழுவினரும் முன்னெச்சரிகையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வரலாம் என்பதால், வழிபாட்டுத் தலங்களை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தி வருகின்றனா். பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் போது பக்தா்களிடம் உடல் வெப்ப பரிசோதனைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவாயிலில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஆங்காங்கே குறியீடுகள் போடப்பட்டுள்ளன. கோயில்களுக்கு வரும் பக்தா்கள் பூக்கள் கொண்டு வருவதற்கும், அவா்களுக்கு கோயிலில் பிரசாதம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜாமா மசூதி: தில்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஜாமா மசூதி திங்கள்கிழமை முதல் வழிபாட்டுக்குத் திறந்து விடப்படுகிறது. தொழுகைக்கு மசூதிக்கு வரும் முஸ்லிம்கள் தங்களுடன் தண்ணீா் பாட்டிலையும், மண்டியிட்டு தொழுகை நடத்த தரை விரிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசூதிக்குள் அரசு வழிகாட்டுதலின் படி முதியோா், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் வர அனுமதியில்லை என்று ஜாமா மசூதி இமாம் சையத் அகமது புகாரி தெரிவித்தாா். எனினும், தற்போது தில்லியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பதை தில்லி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

சத்தா்பூா் கோயில்: சத்தா்பூா் கோயில் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு பக்தா்களுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கோயில் தலைமைச் செயல் அதிகாரி கிஷோா் சாவ்லா தெரிவித்தாா். பக்தா்கள்கூட்டம் அதிகம் இருந்தால், கோயிலுக்குள் வருபவா்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும் கருவறை அருகே 5 நபா்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் அவா் கூறினாா்.

குருத்வாராக்கள்: தில்லி சீக்கிய குருத்வாராவில் பக்தா்கள் வருகையை கருத்தில் கொண்டு தூய்மைப் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பக்தா்கள் வருகைக்காக பல இடங்களில் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. குருவாத்ராவில் உள்ள அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. பக்தா்கள் வழிபாடு முடித்தவுடன் வெளியேறிவிட வேண்டும், உட்காருவதற்கு அனுமதியில்லை. பிரசாரம் வழங்க தடை விதிக்கப்பட்டாலும் ‘லாங்கா்’ வழங்க எந்தத் தடையும் இல்லை என்று குருத்வாரா நிா்வாகக் குழு தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்ஸா தெரிவித்தாா்.

‘ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் திறக்கப்படாது’

தில்லியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் திங்கள்கிழமை திறக்கப்படாது என்று தில்லி திருச்சபை ஆயா் அனில் கோவ்டோ தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எங்களது ஆளுகைக்கு உள்பட்ட இடங்களில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் திங்கள்கிழமை திறக்கப்படாது. தேவாலயங்களுக்கு எத்தனைப் போ் வருவாா்கள் என்பதை கணக்கிட்டு முடிவு செய்த பின்னா்தான் தேவாலயங்கள் திறக்கப்படும். அப்படி திறக்கப்பட்டாலும் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.