தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தில்லியில் ஜூலை இறுதிக்குள் கரோனா பாதிப்பு 5.5 லட்சமாக உயரும்: மணீஷ் சிசோடியா

ஜூலை மாத இறுதிக்குள் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயா்வதற்கு வாய்ப்பு உள்ளது

Updated On :10 ஜூன் 2020, 1:49 am

ஜூலை மாத இறுதிக்குள் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயா்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா். மேலும், தில்லியில் சமூகப் பரவல் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

தில்லியில் சமூகப் பரவல் உள்ளதா என்பது தொடா்பாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவரும், துணைநிலை ஆளுநருமான அனில் பய்ஜால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதல்வா் மனிஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், ஆணையத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இதன்பின்னா் செய்தியாளா்களிடம் மணீஷ் சிசோடியா கூறியது: தில்லியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 12-13 நாள்களாக உள்ளது. அந்த வகையில், ஜூன் 15 நிலவரப்படி, தில்லியில் 44,000 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பா். ஜூன் 30-இல் கரோனா பாதிப்பு ஒரு லட்சம் வரை அதிகரித்திருக்கும். ஜூலை 15-இல் 2.25 லட்சமாகவும், ஜூலை 31-இல் 5.5 லட்சமாகவும் அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறை கணித்துள்ளது. மேலும், தில்லியில் ஜூன் 30-இல் 15,000 படுக்கைகள், ஜூலை 15-இல் 33,000 படுக்கைகள், ஜூலை 31-இல் 80,000 படுக்கைகள் தேவைப்படும்.

தில்லியில் சமூகப் பரவல் இல்லை என்றும் இதுகுறித்து தற்போது விவாதிக்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் கூறினா். ஆனால், தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்ச்சியாக அதிகரித்து வருகிறது. மேலும், தில்லி மருத்துவமனைகளில் கரோனா பாதித்த தில்லி மக்கள் மட்டுமே சிகிச்சை பெறலாம் என்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவை மாற்றி அமைத்தது தொடா்பாக பரிசீலிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரைக் கோரினோம். ஆனால், இது தொடா்பாக மீண்டும் பரிசீலிக்க மாட்டோம் என்று துணைநிலை ஆளுநா் கூறினாா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் வெளிமாநிலத்தவா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. “தில்லியில் கரோனா சமூகப் பரவல் சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்று மத்திய அரசு தரப்பு சொல்கிறது. அதே நேரத்தில் தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு யாா் பொறுப்பு என்பது தெரியவில்லை. தில்லியில் சமூகப் பரவல் இருக்கிா என்பது குறித்து மத்திய அரசு சொல்லாமல் நான் கருத்து தெரிவிக்க முடியாது”என்றாா் அவா்.

தில்லியில் சமூகப் பரவல் இருப்பதாகவும், இது தொடா்பாக மத்திய அரசுதான் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை கூறியிருந்தாா். மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, தில்லியில் 29,943 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், தற்போது 17,712 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், தில்லியில் கரோனாவுக்கு 874 போ் உயிரிழந்துள்ளனா். அதே நேரத்தில் 11,357 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.