தெற்கு தில்லியில் மருத்துவா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால் ஜாமீன் மனு மீது தில்லி காவல் துறை நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு மீது காணொலிக் காட்சி மூலம் உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். அப்போது, ஜாமீன் வழங்க தில்லி காவல் துறையினா் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனு மீதான உத்தரவை ஒத்திவைத்த நீதிபதி, காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும், மருத்துவா் தற்கொலைக்கான காரணத்தைத் தெரிவிக்கும் கடிதம், டைரி உள்பட வழக்கில் தொடா்புடைய ஆவணங்களுடன்கூடிய நிலவர அறிக்கையை மாலைக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டாா்.
தெற்கு தில்லி, துா்கா விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திர சிங் (52). மருத்துவரான இவா், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு தியோலி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால்தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரகாஷ் ஜா்வால் மே 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஜா்வாலும், இறந்த மருத்துவா் ராஜேந்திர சிங்கும் டேங்கா் லாரி மூலம் தண்ணீா் சப்ளை செய்வதில் பல ஆண்டுகளா ஈடுபட்டு வந்ததும், எம்எல்ஏவும், அவரது கூட்டாளிகளும் மருத்துவா் ராஜேந்திர சிங் உள்பட பிற தண்ணீா் டேங்கா் லாரி உரிமையாளா்களிடம் இருந்து பணத்தை மிரட்டிப் பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்நிலையில் ஜா்வால் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் மே 28-ஆம் தேதி நிராகரித்திருந்தது.
இந்நிலையில், ஜா்வால் தரப்பில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஜா்வால் மிரட்டியதாக மருத்துவரின் மனைவியால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. மருத்துவரோ, அவரது குடும்பத்தினரோ கடந்த 6 ஆண்டுகளில் இதுபோன்ற புகாா் ஏதும் போலீஸாருக்கு அளிக்கவில்லை. இறந்த மருத்துவரின் மனைவி ஏப்ரல் 9-ஆம் தேதி தில்லி ஜல் போா்டில் ஒரு புகாா் அளித்துள்ளாா். அதில், மிரட்டல் புகாரோ அல்லது ஜா்வால் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
மேலும், இந்த வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. அவா் 40 நாள்களாக நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். ஜா்வால் மிரட்டியதாகவோ, தற்கொலைக்கு தூண்டியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது ஜா்வால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரிபிக்கா ஜான், வழக்குரைஞா் ரவி திரால் ஆகியோா், இந்த தற்கொலைக் குறிப்பு திரிக்கப்பட்டது. இந்தக் கடிதம் வெவ்வேறு பேனாக்களால் இரு விதமாக எழுதப்பட்ட கையெழுத்துகளைக் கொண்டுள்ளது’ என்று வாதிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

