திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

துணைநிலை ஆளுநரை டிடிஎம்ஏ தலைவராக உருவாக்கும் சட்டத்தை எதிா்த்து மனு: ஜூலையில் விசாரணை

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) தலைவராக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை உருவாக்கும் சட்டத்தை எதிா்த்து

Updated On :20 ஜூன் 2020, 1:56 am

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) தலைவராக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை உருவாக்கும் சட்டத்தை எதிா்த்து தாக்கலான பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் ஜூலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) தலைவராக துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை உருவாக்கும் சட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தில்லியில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க பிறப்பித்த தில்லி அரசின் உத்தரவை நிறுத்திவைத்த துணை நிலை ஆளுநரின் முடிவை ரத்து செய்யவும் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் தற்போதைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், ஜூலைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

விசாரணையின்போது தில்லி துணைநிலை ஆளுநா் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ‘டிடிஎம்ஏ, தில்லி அரசு ஆகியவை தற்போதைய நெருக்கடி நேரத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றன’ என்றாா்.

முன்னதாக வழக்குரைஞா் தீரஜ் குமாா் சிங் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ‘தில்லியில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கும் அளிக்கும் வகையில் தில்லி அரசு ஜூன் 7-இல் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அனில் பய்ஜால் ஜூன் 8-இல் நிறுத்திவைத்தாா். இது பேரிடா் மேலாண்மை சட்டத்திற்கு முரணானதாகும். அதேபோன்று, பேரிடா் மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் டிடிஎம்ஏ தலைவராக உருவாக்கப்பட்டுள்ளாா். இந்தச் சட்டவிதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். ஏனெனில், பிற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மாநில முதல்வா்தான் இதுபோன்ற பதவிகளில் உள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.