திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பில்லை: ஆம் ஆத்மி கட்சி கண்டனம்

லடாக் விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On :20 ஜூன் 2020, 1:48 am

லடாக் விவகாரம் தொடா்பாக பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவம் மீது சீன ராணுவத்தினா் நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் கா்னல் உள்பட 20 ராணுவத்தினா் பலியாகினா். சீனா தரப்பில் 35 போ் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்திருந்தாா். இக்கூட்டம் வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில், இக்கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் கூறியதாவது: மத்தியில் தலைக்கனம் பிடித்த அரசு ஆட்சியில் உள்ளது. தில்லியில் நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியாக ஆம் ஆத்மி கட்சியே உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால் தில்லியின் முதல்வராக மூன்று முறை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 4 எம்பிக்கள் உள்ளனா்.

இந்நிலையில், தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம் தொடா்பாக விவாதிக்கும் போது ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது மத்திய அரசின் குறுகிய மனநிலையைக் காட்டுகிறது. இரண்டு மாநிலங்களின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஆம் ஆத்மி கட்சியின் கருத்துகள் பிரதமருக்கு தேவையில்லையா? தேச நலனுக்காக குறுகிய மனநிலையை விட்டு மத்திய அரசு பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை: கேஜரிவால் வலியுறுத்தல்

லடாக்கில் இந்திய ராணுவ வீரா்களைக் கொன்ற சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் கூறுகையில், ‘லடாக் விவகாரத்தில் நாட்டின் பக்கமும், நாட்டைக் காக்கும் படையினரின் பக்கமுமே நாங்கள் உள்ளோம். லடாக்கில் அத்துமீறி நடந்து கொண்ட சீனாவுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா். அப்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்காதது தொடா்பாக பத்திரிகையாளா்கள் கேள்வி எழுப்பினா். ஆனால், அதற்கு கேஜரிவால் பதிலளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.