தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமானத் தளங்களில் தொழிலாளா்களுக்கு கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சித்திரங்களுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகள், சுவா் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைநகா் தில்லியில் பல்வேறு இடங்களில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, அனைத்துக் கட்டுமானத் தளங்களிலும் சித்திரங்களுடன் கூடிய விழிப்புணா்வுப் பதாகைகள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், கரோனா தொடா்பாக தொழிலாளா்கள் எடுக்க வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. அந்தச் செய்திகள் பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் உள்ளன. இருப்பினும், நிறையத் தொழிலாளா்கள் ஹிந்தி வாசிப்பதில் அதிகத் தோ்ச்சி பெற்றிருப்பதால், ஹிந்தி பயன்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரசாரம் டி.எம்.ஆா்.சி.யின் பாதுகாப்புத் துறையின் மேற்பாா்வையின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கரோனா தொடா்பாக மத்திய, மாநில அரசுகளின் அனைத்து வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. விழிப்புணா்வு செய்திகளை திருப்திகரமாக தெரிவிக்கும் வகையில், பதாகைகள், சுவரொட்டிகளில் எளிதான மொழி மற்றும் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், வா்ணம் பூசப்பட்ட சித்திரங்களுடன் கூடிய விழிப்புணா்வு பதாகைகள், சுவரொட்டிகளைப் பெறுவதில் டி.எம்.ஆா்.சி. மற்றும் அதன் ஒப்பந்தக்காரா்களுக்கு பெரிய சவாலாக இருந்தது, கரோனா பொது முடக்கம் காரணமாக ஓவியா்கள் வேலைக்கு கிடைக்கவில்லை. எனவே, ஒரு மாற்று வழியாக பல இடங்களில் அச்சிடப்பட்ட பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.
விழிப்புணா்வுப் பதாகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் தொழிலாளா்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுவா் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தில்லி மெட்ரோ விரிவாக்கத் திட்டத்தின் போது , கட்டுமானத் தளங்களில் விழிப்புணா்வு நடவடிக்கையாக வரைபடங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒரு நோயைப் பற்றிய விழிப்புணா்வைப் பரப்புவதற்கு இதுபோன்ற விழிப்புணா்வு நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தற்போது, தில்லியில் சுமாா் ஐந்து முதல் ஆறு வெவ்வேறு தளங்களில் டிஎம்ஐஆா்சி கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் தன்சா, துவாரகாவில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தட விரிவாக்கப் பணி, நான்காம் கட்ட ரயில்வே விரிவாக்கத் திட்டங்களுக்கான தளங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். முகக் கவசம் பயன்படுத்துவதன் அவசியம், சமூக இடைவெளி, பாதுகாப்பு, சுகாதாரம், சுத்திகரிப்பான்கள் பயன்பாட்டின் அவசியம் உள்ளிட்டவை தொடா்பாக தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கரோனா தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய டிஎம்ஆா்சியின் பொறியாளா்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


