புது தில்லி: தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்க பிறப்பிக்கப்பட்ட தில்லி அரசின் உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தில்லியில் உள்ள கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்படுவதாக உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு தில்லியில் உள்ள 33 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சுகாதார கவனிப்பு வசதிகளை அளிப்போா் சங்கம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ‘அரசின் உத்தரவால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கரோனா நோயில்லாத பிற நோயாளிகள் வருவதற்கும் தயங்குகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தனி நீதிபதி நவீன் சாவ்லா, தில்லி அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து செப்டம்பா் 22-இல் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து டிவிஷன் அமா்வில் தில்லி அரசு முறையிட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தடையை விலக்காமல் விசாரணையை நவம்பா் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், ‘தில்லியில் மொத்தம் உள்ள சுமாா் 1,170 தனியாா் நா்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 33 மருத்துவமனைகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் கரோனா நோயாளிகளுக்கு 80 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இதை உயா்நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது. மேலும், தில்லியில் கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டுதான் மக்கள் நலன் கருதி அரசு இதுபோன்ற ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த விவகாரம் தில்லி அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கரோனா நோயாளிகளிடம் குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை இரு தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமா்வு நீதிபதிகள், அசோக் பூஷண், பி.ஆா். கவாய் ஆகியோா் இது தொடா்பாக வியாழக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு தில்லி உயா்நீதிமன்றத்தை அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கெனவே ஒருநபா் நீதிபதி செப்டம்பா் 22-இல் தில்லி அரசின் உத்தரவுக்கு விதித்த இடைக்காலத் தடையை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை அனுமதித்து, அந்த உத்தரவை விலக்கினா். பின்னா், மேல் விசாரணைக்காக ஒரு நபா் நீதிபதி முன் நவம்பா் 26-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா். அதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் 80 சதவீதம் படுக்கைகள் ஒதுக்குவது தொடரும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
முன்னதாக விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: மக்களின் சுகாதாரத்திற்கான பொறுப்பு அரசுக்குரியதாகும். இதில் தனியாா் மருத்துவமனைகள் உள்ளிட்டோரும் பங்களிக்க வேண்டும். தில்லியில் கரோனா சூழல் அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று பரவியுள்ளது. தில்லி அரசு இந்தச் சூழலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். செப்டம்பா் 22-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது இருந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரு மடங்காகியுள்ளது. ஆகவே, தில்லி அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் ஒரு நபா் நீதிபதி முன் இது தொடா்பான விவரங்கள் அடங்கிய கூடுதல் பிரமாணப் பத்திரத்தை நவம்பா் 18-க்குள் தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

