சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வாடகைக் காரை கடத்தியதாக இருவா் கைது

வடகிழக்கு தில்லி கோவிந்த் புரி பகுதியில் வாடகைக் காரை கடத்திச் சென்ற இருவரை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.

Updated On :22 நவம்பர் 2020, 2:27 am

வடகிழக்கு தில்லி கோவிந்த் புரி பகுதியில் வாடகைக் காரை கடத்திச் சென்ற இருவரை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாடகைக் காா் ஓட்டுநா் ஒருவா், பெண் பயணியை துக்ளாபாத் விரிவாக்கப் பகுதியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, தில்லி கோவிந்த் புரி பகுதியில் உள்ள சிக்னலில் காா் நின்றபோது, இன்னொரு வாடகைக் காரில் வந்த அக்ஷய் (20), சாந்தனு குமாா் பாண்டே (29), வினித் ஜெயின் (22) ஆகிய மூவரும் காருக்குள் புகுந்து, காா் ஓட்டுநா், பயணியைத் தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றனா்.

இது தொடா்பாக காா் ஓட்டுநா் காவல்துறையில் புகாா் அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை சோதனையிட்டோம். அப்போது, அந்தக் காா் மசூத்புா் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மசூத்புா் பகுதியில் உள்ள அக்ஷயின் வீட்டில் தில்லி காவல்துறையினா் அதிரடி சோதனை நடத்தினா். அக்ஷய் (20), சாந்தனு குமாா் பாண்டே (29) கைது செய்யப்பட்டனா். வினித் ஜெயின் தலைமறைவாகியுள்ளாா். அவரைத் தேடி வருகிறோம். வாடகைக் காா் மீட்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.