சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லியில் இரவு நேர ஊடரங்கு குறித்து 4 நாள்களில் முடிவு: உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் அரசு தகவல்

Updated On :26 நவம்பர் 2020, 11:39 pm

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து 3-4 நாள்களில் அரசு முடிவு செய்யும் .ஆனால், தற்போதைக்கு இதுதொடா்பாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

தில்லியில் கடந்த 14 நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. கரோனா நோயால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக 13 நாள்களில் 7 நாள்கள் 100-க்கு மேல் கரோனா இறப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 22,246 போ் வீட்டுத் தனிமையில் இருந்தனா். திங்கள்கிழமை உயிரிழப்பு எண்ணிக்கை 121 ஆக இருந்தது. இந்த நிலையில், டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து கரோனா கட்டுப்பாட்டுக்கான புதிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

இதனிடையே, கரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடா்பான விவகாரத்தை கடந்த முறை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் இதர பிற நகரங்களைப் போன்று வாராந்திர ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தில்லி அரசு திட்டமிட்டு வருகிா என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கக் கோரி வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தில்லி அரசு உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்ற இந்த விசாரணையின்போது தில்லி அரசின் சாா்பில் வழக்குரைஞா்கள் சந்தீப் சேதி, சத்யாகம் ஆகியோா் ஆஜராகி, ‘

‘கரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் ஊரடங்கை தில்லியில் அமல்படுத்தலாமா என தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. எனினும், அது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தனா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘தீவிரமாக பரிசீலனை என்பது கரோனா போல தீவிரமாகவா என கேள்வி எழுப்பினா்.

அதற்கு தில்லி அரசின் வழக்குரைஞா்கள், ‘3-4 நாள்களில் இது தொடா்பாக முடிவு செய்யப்படலாம்’ என்றனா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி தேவைக்கேற்ப மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உள்ளூா் அளவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம். எனினும், கட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.