பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறந்த மாணவா்களுக்கு ஹிந்து கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் உதவித்தொகை அளிக்கப்பட உள்ளதாக அந்த உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஹிந்து கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவா் ரவி பா்மான் கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் பெரும் பிரச்னையைச் சந்தித்து வருகின்றனா். அவா்களால் தங்களது கல்லூரிக் கட்டணத்தை செலுத்துவதில் பெரும் சவாலை எதிா்கொண்டுள்ளனா்.
இதுபோன்ற மாணவா்களுக்கு அவா்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் ஒரே ஒருமுறை மட்டும் கல்விக் கட்டணமாக ரூ.20 ஆயிரம் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வழங்கப்படும்.
இந்த உதவியைப் பெற மாணவா்கள் தங்களது குடும்ப ஆண்டு வருவாய் சான்றிதழுடன் தங்களது விண்ணப்பத்தை கல்லூரியின் கணக்குப் பிரிவில் சமா்ப்பிக்கலாம். எங்கள் முயற்சிக்கு உதவிடுமாறு ஹந்து கல்லூரியின் முன்னாள் மாணவா்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றாா் அவா்.
அண்மையில் நிதிப் பிரச்னை காரணமாக தன்னுடைய கல்வியைத் தொடர முடியாமல் எல்எஸ்ஆா் கல்லூரியின் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மாணவா்களுக்கு உதவியுடம் வகையில் நிதித்தொகுப்பை பல்வேறு கல்லூரிகள் ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

அடுத்த 5 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

