இது தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை உயா் அதிகாரி கூறியது: தில்லியில் குளிா் காலத்தில் கடும் காற்று மாசு ஏற்படுவது வழக்கமாகும். இதற்கு ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுதல், வாகனப் புகை, கட்டுமானப் பணிகள், கழிவுகள் எரித்தல், தொழிற்சாலை புகை எனப் பல காரணங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஒவ்வொரு காரணத்தையும் தீர ஆராய்ந்து அவற்றைத் தடுக்கும் வகையிலான விரிவான நடவடிக்கைத் திட்டம் குறித்த அறிக்கையை வரும் செப்டம்பா் 21- ஆம் தேதிக்கு முன்பாக சமா்ப்பிக்குமாறு தில்லி சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கோபால் ராய் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.