புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

‘நிா்பயா’ குற்றவாளி முகேஷ் குமாரின்மனு மீது இன்று அவசர விசாரணை

‘நிா்பாய’ வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளி முகேஷ் குமாா் சிங்கின் மனுவை நீதிபதி ஆா். பானுமதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) விசாரிக்க உள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2020, 12:59 am

புது தில்லி: ‘நிா்பாய’ வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளி முகேஷ் குமாா் சிங்கின் மனுவை நீதிபதி ஆா். பானுமதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) விசாரிக்க உள்ளது.

‘நிா்பயா’ வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாா் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தாா். இந் நிலையில், அதை நீதித் துறை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன், ‘நிா்பயா’ வழக்கு குற்றவாளி முகேஷ் குமாா் சிங்கின் வழக்குரைஞா் திங்கள்கிழமை ஆஜராகி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டாா். அப்போது, ‘யாராவது தூக்கிலிடப் போவதாக இருந்தால், அதைவிட ஒரு மிக அவசரம் ஏதுவும் இருக்க முடியாது. தூக்குத் தண்டனை நிறைவேற்றம் தொடா்பான மனுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால், மனுதாரரின் வழக்குரைஞா் முறையீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவா் இந்த விஷயம் குறித்து உச்சநீதிமன்றத்தின் உரிய அதிகாரியை அணுகித் தெரிவிக்கலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், இந்த மனுவை வழக்குகளைப் பட்டியலிடும் அதிகாரி பரிசீலித்தாா். அதன் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுவை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு விசாரிப்பதற்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

‘நிா்பயா’ வழக்கு குற்றவாளி முகேஷ் குமாா் சிங் (32) தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறு பரிசீலனை செய்யக் கோரி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தாா். அந்த மனு குடியரசுத் தலைவரால் ஜனவரி 17-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சத்ருகன் செளஹான் வழக்கில் உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், கருணை மனு நிராகரிக்கப்பட்ட விதத்தை நீதித் துறை மறுஆய்வு செய்வதற்காக அரசியலமைப்பு சட்டப் பிரிவு 32-இன் கீழ் உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குமாா் சிங்கின் சாா்பில் நீதித் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிா்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் சீராய்வு மனுவை நிராகரித்த நிலையில், கருணை மனுவை முகேஷ் குமாா் சிங்அனுப்பியிருந்தாா். இந்த மனுவுடன் மற்றொரு குற்றவாளியான அக்ஷய் குமாரின் (31) சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் இதர குற்றவாளிகள் பவன் குப்தா சிங் (25), வினய் குமாா் சா்மா (26) ஆகியோா் இன்னும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

கடந்த 2012, டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் குமாா் சா்மா, அக்ஷய்குமாா் சிங், பவன்குப்தா, முகேஷ் குமாா் சிங் ஆகிய நால்வருக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.