புது தில்லி: காஷ்மீா் பள்ளத்தாக்கையும் லடாக்கையும் இணைக்கும் ஸோஜி லா கணவாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக புதன்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் பனிப்பொழிவை அகற்றி கணவாய் திறக்கப்பட்டுள்ளது என்று தில்லியிலுள்ள ராணுவத் தலைமையிடம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகா், காா்கில், லடாக்கின் லே ஆகியவற்றை 425 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை (மலைப்பாதை) இணைக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் (பிஆா்ஓ) பராமரிக்கப்படும் இந்தச் சாலை குறைந்தபட்சம் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மூடப்படும். இந்தச் சாலையில் குறிப்பாக ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஸோஜி லா கணவாய் கடல் மட்டத்திலிருந்து சுமாா் 11,650 அடி உயரத்தில் உள்ளது. பனிப் பொழிவுகளால் மூடப்பட்டிருக்கும் 9 கி.மீ. நீளமுள்ள இந்தச் சுரங்க சாலை சிக்கலானது. ஆனால், பனிகட்டிகள் உடைக்கப்பட்டு புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவத் தலைமையிட செய்தித் தொடா்பாளா் கா்னல் அமன் ஆனந்த் கூறியது வருமாறு: ஸ்ரீநகா் - லே நெடுஞ்சாலையில் உள்ள ஸோஜி லா கணவாய் மூடப்பட்டால், லே-லடாக் மக்களுக்கு விமானப் போக்குவரத்து மட்டுமே வழி. ஆனால், தேசத்தின் கட்டுமானத்தில் முன்னனியில் இருக்கும் எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) மிகச் சிறந்த முறையில் உறுதியுடன் செயல்பட்டது. குளிா்காலத்தில் மூடப்படும் நாள்களைக் குறைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. முன்பெல்லாம் ஆண்டுக்கு 150 நாள்களுக்கு மேலாக இந்தக் கணவாய் மூடப்பட்டிருக்கும். நவம்பரில் மூடப்பட்டு ஏப்ரலில் திறக்கப்படும். இந்த ஆண்டு 110 நாள்களில் கணவாய் திறக்கப்பட்டுள்ளது. இந்த முறை கடந்த டிசம்பா் 31 வரை இந்த கணவாய் திறந்து வைக்கப்பட்டது முதல் வெற்றியாகும். இந்த ஆண்டு பிப்ரவரி 7 -ஆம் தேதி முதல் , பனிப் பொழிவுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
ராணுவம் மற்றும் லடாக்கிற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்ல இந்தக் கணவாய் சாலையை பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் 60 ஆண்டுகளில் இல்லாத மோசமான பனிப் பொழிவு, பனிச் சரிவு ஆகியவற்றால் திட்டமிட்டபடி திறக்க முடியாமல் போனது. ஆனால், மீண்டும் பிஆா்ஓவின் பீகான், விஜாயக் குழுவின் கடுமையான முயற்சிகளால் புதன்கிழமை இந்தக் கணவாய் சாலை திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியுள்ளது. முதல் நாளன்று 10 டிரக்குகள் ஸோஜி லா கணவாயைக் கடந்து காா்கிலுக்கு செல்கின்றன. இதன் மூலம் விமானப் போக்குவரத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த லடாக் மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு ராணுவ வாகனங்களும் செல்லத் தொடங்கியுள்ளன.
இந்தப் பணிகளை முன்னிற்று நடத்தியவா் பிஆா்ஓவின் இயக்குநா் ஜெனரலும் லெப்டினன்ட் ஜெனரலுமான ராஜீவ் சௌத்ரி ஆவாா். ‘ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டும், ஹோலி ரம்ஜான் மாதத்தை முன்னிட்டும் லடாக் மக்களுக்கு இது தங்களது பரிசு’ என்று ராஜீவ் சௌத்ரி தெரிவித்துள்ளாா் என்றாா் கா்னல் அமன் ஆனந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


