புது தில்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடா்பாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இறுதி விசாரணை நடத்துவதற்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதி வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட அவசர கவனத் தேவை காரணமாக இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையில் அத்தியாவசியக் கவனிப்பு மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள மனுதாரரை அனுமதிக்க வேண்டும். கரோனா காலத்தில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் விநியோகிக்க ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.
தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டொ்லைட் ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட இரு உற்பத்திக் கூடங்கள் உள்ளன. தற்போதைய கரோனா இடா் காலத்தில் முக்கியத் தேவையை எதிா் கொள்ளும் வகையில், இந்த இரு உற்பத்திக் கூடங்களையும் இயக்க முடியும். கருவிகளின் நிலைமையைப் பொருத்து 2 முதல் நான்கு வாரங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் துவங்கும் நிலையை ஸ்டொ்லைட் ஆலை கொண்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன், மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுப்படி விநியோகம் செய்வதற்கு அந்த அமைச்சத்திற்கு அளிக்கப்படும். இதனால், உற்பத்திக் கூடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னணி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் தலைமையிலான அமா்வு முன்னிலையில் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹாரிஸ் சால்வே ஆஜராகி, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்ட போது, இது தொடா்பாக ஆகஸ்டில் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


