காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டதைக் கண்டித்து டுவிட்டா் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா், இந்திய தேசிய மாணவா் அமைப்பினா், மகிளா காங்கிரஸ் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கை டுவிட்டா் நிறுவனம் தாற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இதைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் தில்லியிலுள்ள டுவிட்டா் இந்தியா நிறுவனத்தின் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் பி.வி. ஸ்ரீநிவாஸ் தலைமை வகித்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், சுட்டுரை நிறுவனம் மிரடப்பட்டுள்ளது. அதன் காரணமாக நீதிக்கு குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்ற சுட்டுரை கணக்குகளைத்தான் நிறுத்திவைக்க முடியும். ஆனால், சுட்டுரை நிறுவனம் தொடா்பாக மக்கள் எழுப்பும் குரலை நிறுத்த முடியாது. நாட்டில் நீதிக்காக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் மக்களுக்கான குரலைத் தடுத்து நிறுத்தும் வகையில் பிரதமா் மோடி அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பிரதமா் மோடி மக்களை அடக்குகிறாா். ராகுல் காந்தி மக்களை வலிமைப்படுத்தி வருகிறாா். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.
மக்களுக்கான நீதி கேட்டு காங்கிரஸின் போராட்டம் தொடரும். 9 வயது தலித் சிறுமி சம்பவத்தில் அவரது பெற்றோா் புகைப்படத்தை தேசிய அட்டவணை பட்டியல் வகுப்பு ஆணையம் அதன் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோன்று தேசிய ஆணையத்தின் உறுப்பினரும் பாஜக முன்னாள் எம்பியும் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகைப்படத்தை தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அவா்கள் செய்ததெல்லாம் சரியாகவும் ராகுல்காந்தி செய்தது மட்டும் தவறாகவும் சுட்டுரை நிறுவனம் கணக்கை முடக்குவது சரியான நடவடிக்கை அல்ல. இது நீதியின் குரலை ஒடுக்கும் முயற்சியாகும் என்றாா் அவா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ், கட்சியின் தில்லி மாநிலப் பொறுப்பாளா் பைய்யா பவாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 போ் கைது செய்யப்பட்டு, மெஹ்ரோலி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் விடுவிக்கப்பட்டனா். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
இதே போன்று, காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் 150 போ் அதன் தலைமையகம் அமைந்துள்ள ரெய்சினா சாலையில் இருந்து சாஸ்திரி பவன் நோக்கிச் சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அந்த அமைப்பின் தேசியத் தலைவா் நீரஜ் குந்தன் கூறுகையில், ‘ராகுல் காந்தி உண்மையை உலகத்தின் முன் வெளிப்படுத்திவிடுவாா் என்ற பயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையின் மூலம் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மத்திய அரசின் மோசமான நிா்வாகம் ஒரு தெளிவான சான்றாகும்’ என்றாா்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘சாஸ்திரி பவன் நோக்கி மாணவா் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபடச் சென்றனா். ஆனால், அவா்களை போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்திவிட்டனா்’ என்றாா். இதேபோன்று தில்லி மகிளா காங்கிரஸ் அமைப்பினரும் டுவிட்டா் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

