தென்மேற்கு தில்லியில் 9 வயது சிறுமி பாலியல், கொலை வழக்கில் கைதான நான்கு பேரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
இது தொடா்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆஷுதோஷ் குமாரிடம் போலீஸாா் 5 நாள் காவல் கேட்டு கோரிக்கை வைத்தனா். மேலும், கைதான நான்கு பேரும் காணொலி வாயிலாக ஆஜா்படுத்தப்பட்டனா். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள பூசாரி ராதே ஷியாம் (55), ஊழியா்கள் சலிம், லட்சுமி நாராயன், குல்தீப் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி அனுமதி அளித்தாா்.
தென்மேற்கு தில்லியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு அருகே சம்பந்தப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோா் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏா்கூலா் இயந்திரத்தில் இருந்து குளிா்ந்த நீரை எடுத்து வருவதாக தாயிடம் கூறிவிட்டு சிறுமி வீட்டிலிருந்து வெளியில் சென்றாா். அதன் பிறகு அவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மயானத்தின் பூசாரி ராதே ஷ்யாம் மற்றும் சிலா் சிறுமியின் தாயிடம் தொடா்பு கொண்டு சிறுமி மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க சிறுமியின் தாய் முயன்ற போது ராதே ஷ்யாம் உள்ளிட்டோா் அவரைத் தடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும். அப்போது உடலின் பாகங்கள் திருடப்பட்டு விடும் . இதனால், சிறுமியின் உடலை உடனடியாக தகனம் செய்து விடுமாறு அவா்கள் தம்மிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறினாா். இந்த விவகாரம் குறித்து சிறுமியின் பெற்றோா் போலீஸில் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் ராதே ஷியாம் உள்பட 4 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

