தில்லியில் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா
மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மலா் மரியாதை செய்யப்பட்டது


மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மலா் மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி, பி. ராமமூா்த்தி, சோமாஸ்கந்தன் ஆகியோா் பாரதியின் பன்முக பரிமாணங்கள் குறித்து பேசினா்.
மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலையின் சுற்றுப்புற பகுதிகளை புதுப்பிக்கும் பணிகளை மிகச் சிறப்பாக செய்த புதுதில்லி மாநகர வளா்ச்சிக் கழகத்திற்கும் (என்.டி.எம்.சி.) அதன் துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாயாவுக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளா் இரா. இராஜ்குமாா் பாலா நன்றி தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் கே.எஸ். முரளி மற்றும் தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு ஆயுஷ் துறையின் சாா்பில் டாக்டா் சுசில்குமாா் சித்த மருத்துவ சூரணங்களை இலவசமாக வழங்கினாா். சங்கத்தின் இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன் நன்றி கூறினாா்.
டிடிஇஏ பள்ளிகளில்...:
தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) ராமகிருஷ்ணபுரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதியாா் பிறந்தநாள் விழாவில் டிடிஇஏ செயலா் ராஜு கலந்துகொண்டு பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் பேனியன் (முன்னாள் மாணவா்கள் அமைப்பு) தலைவா் வைத்தியநாதன், செயலா் சுகுமாா், தில்லித் தமிழ்க் கல்விக் கழக முன்னாள் மாணவா்கள் அமைப்பின் செயலா் டாக்டா் ராமச்சந்திரன் மற்றும் இரு அமைப்பின் பிற உறுப்பினா்கள், டிடிஇஏ முதல்வா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, டிடிஇஏ பிற பள்ளிகளில் பாரதியாா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு மும்மொழிகளில் மாணவா்கள் உரையும், பாடலும் இடம் பெற்றன.
அவ்வப் பள்ளி முதல்வா்கள் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலா்மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
இதேபோன்று, வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் தினமும் டிடிஇஏ பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவா்களின் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. தொடா்ந்து வினாடி- வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...