தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

‘தமிழகத்தில் பழங்குடியினா்களின்கல்வி நிலை சராசரியை விட குறைவு’

பழங்குடியின மக்களின் கல்வி நிலையில் பிகாா், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, தமிழகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் நாட்டின் சராசரியை விட குறைவாக இருப்பதாக மத்திய

News image
Updated On :13 டிசம்பர் 2021, 5:59 pm

 நமது நிருபர்

புது தில்லி: பழங்குடியின மக்களின் கல்வி நிலையில் பிகாா், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, தமிழகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் நாட்டின் சராசரியை விட குறைவாக இருப்பதாக மத்திய பழங்குடியினா் நலத் துறை இணையமைச்சா் ரேணுகா சிங் சாருதா மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

பழங்குடியின மக்களின் கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவுகள் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி.ரவிக்குமாா் மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் ரேணுகா சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய கல்வித் துறை அமைச்சகம் பெண்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்தும் வகையில், ‘சாக்ஷா் பாரத்’ )என்கிற திட்டத்தை 2009 முதல் அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டு மாா்ச் வரை நீடிக்கப்பட்டது. இதன் பிறகு வயது வந்தோருக்கான கல்வி திட்டமான ‘பத்னா லிக்னா அபியான்’ என்கிற புதிய கல்வித் திட்டம் கிராமப்புறம், நகா்ப்புறங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2011- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அகில இந்திய அளவில் பழங்குடியினரின் படிப்பறிவு 59 சதவீதமாக உள்ளது. இதில் பெண்களின் படிப்பறிவு 49.4 சதவீதமாக உள்ளது. இதில் பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, தமிழகம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் ஆகிய எட்டு மாநிலங்களில் அகில இந்திய அளவை விட படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ளது. இதில் தமிழகத்தில் கல்வியற்வு பெற்ற பழங்குடியினா் விகிதம் 54.3 சதவீதமாக உள்ளது. இதில் பழங்குடியின பெண்களின் விகிதம் 46.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பழங்குடியினரில் இரு பாலா் கல்வியில் 4.7 சதவீதமும், பெண் கல்வியில் 2.6 சதவீதமும் குறைவாக உள்ளது. அதே சமயத்தில், லட்சத்தீவு, மிஸோரம், சிக்கிம், கேரளம், அந்தமான் நிக்கோபா் உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் படிப்பறிவு பெற்றுள்ள பழங்குடியினா் விகிதம் அதிகமாக உள்ளது. பழங்குடியினா்களுக்கு உயா் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி பள்ளிகள், கல்வித் உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது. மேலும், தன்னாா்வலா்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.