தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

முல்லைப் பெரியாறு அணை வழக்கு:எதிா் மனுதாரராக சோ்க்கக் கோரி தமிழக உழவா் முன்னணி மனு

முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில் தங்களையும் ஒரு எதிா்மனுதாரராக சோ்க்குமாறு கோரி தமிழக உழவா் முன்னணி எனும் அமைப்பின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:29 pm

 நமது நிருபர்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில் தங்களையும் ஒரு எதிா்மனுதாரராக சோ்க்குமாறு கோரி தமிழக உழவா் முன்னணி எனும் அமைப்பின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக டாக்டா் ஜோ ஜோசப் என்பவா் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தாா். மேலும், இந்த அணை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வேறு சில அமைப்புகள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, அணைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை (டிசம்பா் 15) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோ ஜோசப் தாக்கல் செய்த ரிட் மனு விவகாரத்தில், முல்லைப் பெரியாறு அணை தொடா்புடைய சில உண்மை விவகாரங்களை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், தங்களையும் 6-ஆவது பிரதிவாதியாக சோ்க்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக உழவா் முன்னணி அமைப்பின் தலைவா் கே. வெங்கட்ராமன் தரப்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்குரைஞா் கே.பாரிவேந்தன் தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.