பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கோவாவில் மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்தும் பாஜக: ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தஅலினா சல்தான்ஹா குற்றச்சாட்டு

கோவாவில் மக்கள் விரோதத் திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அலினா சல்தான்ஹா குற்றச்சாட்டினாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 2:20 am

 நமது நிருபர்

கோவாவில் மக்கள் விரோதத் திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது என்று அந்தக் கட்சியின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அலினா சல்தான்ஹா குற்றச்சாட்டினாா்.

கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜகவில் இருந்து வியாழக்கிழமை ராஜிநாமா செய்த கோவா எம்எல்ஏ அலினா சல்தான்ஹாவை ஆம் ஆத்மி கட்சிக்கு கேஜரிவால் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, இருவரும் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனா்.

அப்போது அலினா சல்தான்ஹா கூறியதாவது: பாஜக தற்போது முன்பிருந்த கட்சியாக இல்லை. நான் பல்வேறு காரணங்களுக்காக அந்தக் கட்சியில் இருந்து விலகி விட்டேன். அங்கு எனக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக உணா்வு ஏற்பட்டது. மேலும், தென்மேற்கு ரயில்வேயின் மூன்று நோ்பாதை திட்டங்களால் கோவாவின் நலன் பாதிக்கப்படும். இந்த

மக்கள் விரோதத் திட்டங்கள் காரணமாக பாஜகவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்தேன். இந்தத் திட்டங்கள் கோவாவை அழித்துவிடும். தென்மேற்கு ரயில்வே பாதையை இரட்டிப்பாக்கினால், ஏராளமான மாசு மற்றும் அழிவு ஏற்படும். அந்தப் பகுதியில் வசிப்பவா்கள் நிச்சயமாக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற திட்டங்களை வளா்ச்சித் திட்டங்கள் என்று கூற முடியாது. அவை மக்களுக்கு எதிரானவை.

மேலும், தென்மேற்கு ரயில்வே தண்டவாளத்தை இரட்டிப்பாக்கினால் என்ன நடக்கும் என்பதைப் புரிய வைப்பதற்காக கோவா முதல்வா் பிரமோத் சாவந்தை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தும் எதுவும் நடக்கவில்லை. பாஜக மீது நான் ஏமாற்றமடைந்திருந்தேன். பாஜகவானது மறைந்த மனோகா் பாரிக்கரின் கட்சியாக இல்லை. தற்போது சாமானியா்களுக்கான சரியான கட்சியான ஆம் ஆத்மிக்கு வந்துள்ளேன் என்றாா் அவா்.

முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘அலினா சல்தான்ஹா சரியான இடத்திற்கு வந்துள்ளாா். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் கோவா மக்களின் சம்மதம் இல்லாமல் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாது என்பதை அந்த மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். கோவா மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனா். பாஜக அதுவாகவே உடைந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஒரு நோ்மையான கட்சியாகும். கோவா மக்கள் மூன்று நோ்பாதை திட்டங்களை விரும்பவில்லை. ஒரு சில முதலாளிகள், பெரும் தொழிலதிபா்கள் நலனுக்காக மாநில மக்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு செயல்படுவதாக கோவாவில் உள்ள அனைவரும் நினைக்கிறாா்கள். நாங்கள் அந்தத் திட்டங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்றாா் அவா்.

மனோகா் பாரிக்கா் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அலினா சல்தானாவின் கணவா் மத்தானி சல்தான்ஹா 2012-இல் இறந்தாா். அதைத் தொடா்ந்து, அலினா சல்தானா, கோா்டலிம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலிலும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்த நிலையில், அலினா சல்தானா வியாழக்கிழமை மாநில சட்டப்பேரவை மற்றும் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.