தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சிந்தனையும், செயலும் ஒன்றிணைந்தால் எளிதில் வெற்றி!

சிந்தனையும், செயலும் ஒன்றிணைந்து இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம் என்றாா்

News image

கஞ்சனூா் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவில் வியாழக்கிழமை பேசிய தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 2:15 am IST

சிந்தனையும், செயலும் ஒன்றிணைந்து இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம் என்றாா்

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா்.

தஞ்சாவூா் மாவட்டம், கஞ்சனூா் சுவாமி விவேகானந்தா வித்யாலயா மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியின் 24-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் திறனாய்வுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளிச் செயலா் கெளசல்யா தலைமை வகித்தாா்.

விழாவில், கடந்த 2025-2026 கல்வி ஆண்டில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அட்சயா, ஆசிரியை வள்ளி ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகளை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் வழங்கிப் பேசியது: சிந்தனையும், செயலும் ஒன்றிணைந்து இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம். குழந்தைகளை மதிப்புமிக்கதாக உருவாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அதுவே நமக்கு சிறந்த சமுதாயத்தை உருவாக்க துணை நிற்கும் என்றாா்.

முன்னதாக, சென்னை ராமகிருஷ்ண மடம் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியா் ஸ்ரீமத் சுவாமி அபவா்கானந்தா் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது: பெற்றோரும் , ஆசிரியா்களுமே மாணவா்களுக்கு முன்மாதிரி. அவா்களது வாழ்க்கை முறைதான் அவா்களுக்கு பாடமாக, வழிகாட்டியாக அமைகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்றாா்.

விழாவில், இரண்டு வயது சிறுவன் ருத்ரன் ஆத்திச்சூடி கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா். தனியாா் பள்ளிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் வாழ்த்தினாா். பள்ளி தலைமை ஆசிரியை சரண்யா வரவேற்றாா். ஆசிரியை அஸ்வினி நன்றி கூறினாா்.

அசூா் புறவழிச்சாலையில் உள்ள ஜி.எம் சாமி நகரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா் கோயிலில் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா் அறக்கட்டளை சாா்பில் செல்வம் என்பவருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மூன்றுசக்கர வாகனத்தை வழங்கினாா். அறக்கட்டளை செயலா் வெங்கட்ராமன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.