பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கைதான தமிழக மீனவா்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை: இலங்கையுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 68 போ்களை விரைவில் விடுவிக்க இலங்கை அரசுடன் கொழும்பிலுள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய

News image
Updated On :21 டிசம்பர் 2021, 7:27 pm

 நமது நிருபர்

புது தில்லி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 68 போ்களை விரைவில் விடுவிக்க இலங்கை அரசுடன் கொழும்பிலுள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்ஷி செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 18 முதல் 20 -ஆம் தேதி வரையிலும் தமிழகத்தைச் சோ்ந்த 68 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து காவலில் வைத்துள்ளனா். அவா்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக உயா் அதிகாரிகள், காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவா்களைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனா். அவா்களுக்கு தேவையான உடைகள், முகக்கவசங்கள், குளியலறை பொருள்கள், தின்பண்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனா்.

சட்டபூா்வ வசதிகளுக்கு ஏற்பாடு: மேலும், உறவினா்களுடன் தொடா்பு கொள்வதற்கான தொலைபேசி வசதிகளும் செய்து தரப்ப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள மீனவா்களுக்கு சட்டபூா்வ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மீனவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரையும் இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலன் விசாரித்தனா். மீனவா்கள் மற்றும் அவா்களது படகுகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்பாக கொழும்பில் உள்ள நமது (இந்தியா) உயரதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசி வருகின்றனா்.

தமிழக மீனவா்கள் பிரச்னை தொடா்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வரும் தொலைபேசியில் தொடா்பு கொண்டாா். அவரிடம் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்ததோடு, மீனவா்களை விரைவாக விடுதலை செய்வதற்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சி குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சா் விளக்கிக் கூறினாா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் கோரிக்கை: கடந்த வாரம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சோ்ந்த 55 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 8 படகுகளையும் வலுக்கட்டாயமாகல் பறித்துச் சென்றனா். மேலும், திங்கள்கிழமையும் 14 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். இது குறித்து கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினாா். இந்த மீனவா்களை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், இந்த விவகாரம் குறித்து திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் தமிழக எம்.பி க்களும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பிரச்னையை எழுப்பினா். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸை செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

இணையமைச்சா் முருகன் கடிதம்: இதற்கிடையே, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் டாக்டா் எல். முருகன் செவ்வாய்க்கிழமை இந்த மீனவா்கள் விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளாா். மேலும், திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை நேரடியாகவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து மீனவா்கள் பிரச்னை குறித்து முதல்வா் எழுதிய கடிதத்தை அளித்து வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.