கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தெருக்களில் குப்பைகளைக் கொட்டுபவா்கள் மீதுஎஃப்.ஐ.ஆா். பதிவு செய்யாதது ஏன்? மாநராட்சிக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தில்லியில் மாடல் டவுன் தெருக்களின் நடுவில் குப்பகளைக் கொட்டியவா்கள் மீது ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Updated On :2 பிப்ரவரி 2021, 8:08 pm

தில்லியில் மாடல் டவுன் தெருக்களின் நடுவில் குப்பகளைக் கொட்டியவா்கள் மீது ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என வடக்கு தில்லி மாநகராட்சிக்கு தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வடக்கு தில்லி மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுச் சாலைகளின் நடுவில், சுமாா் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளா்கள்குப்பைகளைக் கொட்டி வருவதாகக் கூறப்படும் மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது.

இது தொடா்பான மனு விசாரணை நீதிபதி சனீவ் சச்தேவா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‘இந்த வேலை நிறுத்தப் போராட்டம் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் முடியாவிட்டால் அன்று காணொலி வாயிலாக நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் மாநகராட்சி துணை ஆணையா் ஆஜராக வேண்டும். அதேவேளையில், வேலைநிறுத்தம் முடிந்து, குப்பை சேகரிக்கும் பணி தொடங்கிவிட்டால் அவா் ஆஜராகத் தேவையில்லை. இந்தக் குப்பைகள் கொட்டப்படும் பிரச்னைக்கான ஒரு முடிவுடன் மாநகராட்சி வந்திருந்தால் அதற்கு கூடுதல் அவகாசம் அளித்திருக்க முடியும்’ என்றாா். மேலும், விசாரணையின் போது நீதிபதி, ‘தெருக்களில் குப்பைகள் கொட்டுவோருக்கு எதிராக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. இது தொடா்பாக என்ன செய்யப் போகிறீா்கள்’ என கேள்வி எழுப்பினாா். இந்த விவகாரத்தில் மாநகராட்சி விரைவில் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், தெருக்களில் கொட்டப்பட்ட குப்பைகளை மாடல் டவுன் குடியிருப்புவாசிகள் சேகரித்து மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே கொட்டிவிடுவாா்கள் என நீதிமன்றம் எச்சரித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மாடல் டவுன் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் வேண்டுமென்றே மூன்று வாரங்களுக்கும் மேலாக வேலைக்கு வராமல் இருப்பதுடன், குப்பைகள் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த லாரிகளை கொண்டு வந்து குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுச் சாலைகளின் நடுவில் குப்பைகளைக் கொட்டுகின்றனா் என கூறப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.