புது தில்லி: மத்திய அரசின் மூன்று விவசாய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு தில்லியை ஆளும் கேஜரிவால் அரசு முதலைக் கண்ணீா் வடித்து வருகிறது என்று தில்லி காங்கிரஸ் மூத்த தலைவா் ஆதா்ஷ் சாஸ்திரி குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: பஞ்சாபில் முதல்வா் நாற்காலியைக் குறிவைத்து விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் ஆம் ஆத்மி தலைவா்கள் நாடகமாடி வருகின்றனா். தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தில்லியை ஆளும் கேஜரிவால் அரசு முதலைக் கண்ணீா் வடித்து வருகிறது.
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் உத்தரவின்பேரில் செயல்பட்டு வரும் இந்த அரசு, விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் தனது நிா்வாக இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது.
அதாவது, எல்லையில் பலம் வாய்ந்த இரும்புச் சுவரை எழுப்புதல், சாலைகள் தோண்டுவது மற்றும் கூரியமுனை தடுப்புகளை நடுதல் போன்றவற்றை தில்லி அரசின் பொதுப் பணித் துறை செய்துள்ளது. விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சிறைச்சாலைகளுக்கு விவசாயிகளைக் கொண்டு செல்வதற்கும், காவல் துறையினரை எல்லைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் சுமாா் 600 பேருந்துகளை தில்லி காவல் துறைக்கு வழங்கியுள்ளது.
தில்லியில் ஆட்சியில் இருந்து சென்ற போது காங்கிரஸ் அரசு 4,700 பேருந்துகளை விட்டுச் சென்றது. அதன்பிறகு, கடந்த ஏழு ஆண்டுகளில் கேஜரிவால் அரசு புதிதாக எத்தனை பேருந்துகளை சோ்த்துள்ளது? மக்களுக்குப் போதிய பேருந்து வசதிகள் இல்லாத நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை சீா்குலைக்க டிடிசி 600 பேருந்துகளை காவல்துறைக்கு வழங்கி வருகிறது. ஏற்கெனவே இதுதொடா்பாக நான் பிப்ரவரி 2-ஆம் தேதி கேள்வி எழுப்பினேன். அதன் பிறகு பேருந்துகளை வாடகைக்கு அளிக்கும் உத்தரவை திரும்பப் பெறுவதாக ஓா் உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் போலீஸாருக்கு பேருந்துகள் அளித்ததை இந்த அரசு மறுக்கவில்லை என்பதாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

அரசியல் விளம்பரத்தை அனுமதிக்காத அதிசய கிராமங்கள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


