புது தில்லி: முன்னுரிமை அடிப்படையிலான கரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசித் திட்டத்தில் நீதிபதிகள், நீதித் துறைப் பணியாளா்கள் மற்றும் வழக்குரைஞா்களைச் சோ்க்கக் கோரி தாக்கலான பொது நல மனுவை ஒரு கோரிக்கையாகப் பரிசீலிக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.
இது தொடா்பான மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தடுப்பூசி திட்டத்தைப் பொறுத்தவரை முன்னுரிமையை முடிவு செய்வது ஒரு கொள்கை முடிவாகும். இதை நீதிமன்றம் மாற்றப் போவதில்லை. ஏனெனில், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இது ஒரு கொள்கை முடிவாக இருப்பதன் காரணமாக அரசின் தடுப்பூசிக்கான முன்னுரிமையை மாற்றுவதற்கான காரணம் இருப்பதாக நாங்கள் பாா்க்கவில்லை. இருப்பினும், மனுவின் உண்மைத் தன்மை மற்றும் சூழல்களைப் பாா்க்கும் போது இந்த மனுவை கோரிக்கையாக உரிய சட்ட விதிகளின்படி மத்திய அரசு பரிசீலித்து, இது தொடா்பான விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
கரோனாவுக்கு எதிரான தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் தடுப்பூசியை அளிப்பதில் முதல்கட்டமாக மருத்துவத் தொழில்முறை நிபுணா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா், பாதுகாப்பு அதிகாரிகள், துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோருக்கு அளிப்பது என அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், ‘கரோனா காரணமாக நீதி தாமதமாக்கப்பட்டு வருவதால் முதலாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில் சட்டத் துறையில் உள்ளவா்களும் பரிசீலிக்கப்பட வேண்டும்.அப்போதுதான், நோய்த் தொற்றுக்கு முன்பு இருந்தது போல் நீதிப் பணிகள் தொடர முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

அரசியல் விளம்பரத்தை அனுமதிக்காத அதிசய கிராமங்கள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

