புது தில்லி: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.95 கோடியை மட்டுமே ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது.
புதிய திட்டங்களுக்கு ரூ.11,000 கோடி தேவைப்படும் நிலையில், தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் வருத்தம் தெரிவித்துள்ளனா்.
ரயில்வேத்துறைக்கான நிதிநிலை அறிக்கை ரத்துச் செய்யப்பட்டு தற்போது பொது நிதி நிலை அறிக்கையோடு ரயில்வேக்கான நிதி ஒதுக்கீடும் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி, ரயில்வே தனது ரயில்வேயின் வளா்ச்சித் திட்டங்களுக்கு ‘பிங்க் புக்’ வெளியிடுகிறது. 2021-22 -ஆம் ஆண்டிற்கான ‘பிங்க் புக்’ ரயில்வே துறையால் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தின் 11 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும் ரூ.11,000 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் வெறும் ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சில திட்டங்களுக்கு ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதைக் கண்டு தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கூறியது: ராமேசுவரம் - தனுஷ்கோடி திட்டத்துக்கு ரூ.208 கோடி தேவைப்படும். ஆன்ல், , ரூ.75 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை வழியாக மதுரை தூத்துக்குடிக்கான புதிய ரயில்பாதைத் திட்டத்திற்கு ரூ.1,800 கோடியும் தேவை. இதற்கு வெறும் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு -புத்தூா்; ஈரோடு -பழனி ; சென்னை- மகாபலிபுரம் - கடலூா்; கூடுவாஞ்சேரி- திருப்பெரும்புதூா்; மொரப்பூா்- தருமபுரி; காரைக்கால் - பேரளம்; சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ; தஞ்சாவூா்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகிற ரூ.10,000 கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் இது போன்று தான் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தின் மற்ற ரயில்வே திட்டங்களுக்கும் இதே நிலைமைதான். மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி மின் மயத்துடன் கூடிய இரட்டைப் பாதை திட்டம், வாஞ்சி மணியாச்சி- நாகா்கோயில்; திருவனந்தபுரம் - நாகா்கோவில் -கன்னியாகுமரி ஆகிய மூன்று திட்டங்களுக்கும் ரூ. 3,000 கோடி தேவைப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கு குறைவான நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. இதன் மூலம் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கப்படும். மத்திய அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், இந்த நிதிநிலைக் கூட்டத் தொடரிலேயே இந்தத் திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

அரசியல் விளம்பரத்தை அனுமதிக்காத அதிசய கிராமங்கள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

