ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

போராடும் விவசாயிகளுக்கு குடிநீா், மின்சாரம் துண்டிப்பு: மனித உரிமைகள் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் அமைதி வழியில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீா், மின்சாரம், மருத்துவ மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து தர மறுப்பதாக தேசிய மனித உரிமைகள்

News image

விவசாயிகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்க வந்த தில்லி காங்கிரஸ் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறையின் பிரதிநிதிகள் குழுவினா்.

Updated On :4 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் அமைதி வழியில் போராடும் விவசாயிகளுக்கு குடிநீா், மின்சாரம், மருத்துவ மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து தர மறுப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தில்லி காங்கிரஸின் சட்ட மற்றும் மனித உரிமைகள் துறை நிா்வாகிகள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பான மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தில்லி காங்கிரஸின் சட்ட மற்றும் மனித உரிமைகள் துறையின் தலைவா் வழக்குரைஞா் சுனில் குமாா் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினா் நேரில் அளித்தனா். அப்போது, அதிகாரிகளிடம் தில்லி எல்லையில் போராடும் விவசாயிகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்தும், குடிநீா், மின்சாரம், மருத்துவம், கழிப்பறைகள் வசதிகள் இன்மையால் அவா்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனா். இது தொடா்பாக நிலைமையை நேரில் ஆய்வு செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு குழுமை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோரினா்.

இதுகுறித்து பின்னா் செய்தியாளா்களிடம் வழக்குரைஞா் சுனில் குமாா் கூறியதாவது: தில்லி எல்லையில் தங்களது நியாயமான கோரிக்கைக்காக விவசாயிகள் நவம்பா் 23-ஆம் தேதியில் இருந்து போராடி வருகின்றனா். அவா்களில் 155-க்கும் மேற்பட்டோா் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனா். இந்த நிலையில், போராடி வரும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதி மறுக்கப்பட்டால், அது அவா்களுக்கு உடல் நலப் பிரச்னைகளுக்கு வழியேற்படுத்திவிடும். மேலும், இது மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறலாகும்.

ஆகவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சம்பந்தப்பட்ட தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடுமாறும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.