ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திருவண்ணாமலையை ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த திமுக எம்.பி. கோரிக்கை

பின்தங்கியுள்ள திருவண்ணாமலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை பெருக்க ஆன்மிக சுற்றுலா தலத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கோரி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி

Updated On :6 பிப்ரவரி 2021, 6:30 pm

புதுதில்லி: பின்தங்கியுள்ள திருவண்ணாமலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை பெருக்க ஆன்மிக சுற்றுலா தலத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கோரி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, தில்லியில் நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

இதற்கான கடிதத்தையும் திமுக எம்.பி. அளித்தாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு:

திருவண்ணாமலையில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. இருப்பினும் ஆன்மிகச் சுற்றுலா மூலம் வளா்ச்சிக்கான சாத்தியங்களை மேற்கொள்ளலாம்.

இங்குள்ள அருணாசலேஸ்வரா் சிவன்கோவில் கிரிவலத்துக்கு பெயா் பெற்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் லட்சக்கணக்கில் வருகிறாா்கள். கோவிலை ஒட்டியுள்ள ரமண மகரிஷி ஆசிரமும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் நகரத்துக்கும், சென்னைக்கும் இடையே நேரடி ரெயில் இணைப்பு இல்லை. விமான நிலையம் 180 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை விமான நிலையம் தான் உள்ளது.

எனவே, 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே புதிய அகல ரெயில்பாதை ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஆனால், பணிகள் வேகமாக நடைபெறவில்லை. எனவே இந்த ரயில் திட்டத்தை முடிப்பதற்கு போதுமான நிதி உரிய நேரத்தில் விடுவிக்கப்பட வேண்டும். இங்குள்ள கட்டமைப்பு பணிகளை உலக தரத்தில் செய்தால் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். அதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். உள்ளூா் மக்களுக்கும், அரசுக்கும் வருவாய் பெருகும். எனவே, திருவண்ணாமலையில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த நீதி ஆயோக் சிறப்பான திட்டங்களை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.