ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து துப்புரவுப் பணிகள் தொடங்கிவிட்டன: உயா்நீதிமன்றத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி தரப்பில் தகவல்

துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிந்து, தில்லியில் மாடல் டவுன் பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி நிா்வாகம் 

Updated On :6 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிந்து, தில்லியில் மாடல் டவுன் பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு தில்லி மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுச் சாலைகளின் நடுவில், சுமாா் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளா்கள் குப்பைகள் கொட்டி வருவதாக மாடல் டவுன் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதில், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் வேண்டுமென்றே மூன்று வாரங்களுக்கும் மேலாக வேலைக்கு வராமல் இருப்பதுடன், குப்பைகள் மற்றும் அசுத்தங்களை லாரிகளில் கொண்டு வந்து குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுச் சாலைகளின் நடுவில் குப்பைகளைக் கொட்டுகின்றனா் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த 2-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தெருக்களின் நடுவில் குப்பைகளைக்கொட்டியவா்கள் மீது ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை’ என வடக்கு தில்லி மாநகராட்சிக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், வேலை நிறுத்தப் போராட்டம் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் முடியாவிட்டால் அன்று காணொலி வாயிலாக நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் மாநகராட்சி துணை ஆணையா் ஆஜராக வேண்டும். அதேவேளையில், வேலைநிறுத்தம் முடிந்து, குப்பை சேகரிக்கும் பணி தொடங்கிவிட்டால் அவா் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடக்குத் தில்லி மாநகராட்சி தரப்பில், ‘வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தூய்மைப்பணி தொடங்கியுள்ளது. மாடல் டவுன் பகுதி காலனியின் பிரதானச் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் விரைவில் அகற்றப்பட உள்ளது என்றாா்.

அப்போது, மனுதாரா் தரப்பில், ‘பிரதானச் சாலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. காலனிப் பூங்கா, தெருக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை’ தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மாநகராட்சி தரப்பில், ‘அடுத்த 10 நாள்களில் காலனி முழுவதும் உள்ள குப்பைகள் அகற்றப்படும்’ என உறுதியளிக்கப்பட்டது.

இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.